இன்றைய கலாசாரத்தில் நிதி மற்றும் வாழ்க்கை முறை வேகமாக மாறிவருகிறது. ஓய்வுக்கு பின்னரும் ஒரு நிரந்தர வருமானம் தேவைப்படுகிறது.
அவ்வாறு விரும்பும் முதலீட்டாளர்களுக்கு எல்.ஐ.சி.,யின் இந்தத் திட்டம் சரியான திட்டமிடலாக இருக்க முடியும். ஏனெனில் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் நிச்சயமாக அளிப்பதுடன், நீங்கள் செலுத்தும் பிரீமியமும் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் இந்தத் திட்டத்தில் உங்களது பணமும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதும் இல்லை. ஒரே நேரத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்தின் பலனைப் பெறக்கூடிய திட்டம் இது.
நீங்கள் திட்டத்தை தொடங்கியவுடன், ஓய்வூதியத்தின் பலனைப் பெறத் தொடங்குவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், ஓய்வூதியம் பெற 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை.
இந்தப் பாலிசியில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆகும். அதே நேரத்தில், அதிகபட்ச வயது 80 ஆண்டுகள் ஆகும். அதாவது 40 வயதில் இருந்தே பென்ஷன் பெறலாம்.
எல்ஐசி சரல் பென்ஷன் திட்டக் குறிப்புகள்
இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1,000 முதல் சேமிக்கலாம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்றால் ரூ.3 ஆயிரம், அரையாண்டுக்கு ஒரு முறை ரூ.6 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் என்ற விகிதத்தில் சேமிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் தனி நபர் அல்லது குடும்பம் மனைவியையும் சேர்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. திட்டம் தொடங்கியவர் ஏதேனும் காரணங்களுக்காக இறக்க நேரிட்டால் நாமினிக்கு பணம் சேரும்.
அதேபோல் பணப் பலனும் மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என்ற விகிதத்தில் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil