Mahila Samman Savings Certificate | Indian Express Tamil

பெண்களுக்கான பிரத்யேக சிறு சேமிப்பு திட்டம்.. டெபாசிட் லிமிட், வட்டி, காலம் எவ்வளவு?

2023 பட்ஜெட் உரையின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு திட்டத்தை முன்மொழிந்தார்.

LIC Kanyadan Policy to Sukanya Samriddhi Yojana Know government schemes for girl child
நந்த தேவி கன்ய யோஜனா திட்டம் உத்தரகாண்ட் மாநில அரசின் திட்டமாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, பெண் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் புதிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் மார்ச் 2025 வரை 2 வருட காலத்திற்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

2 ஆண்டுகள் பெண்கள் அல்லது சிறுமிகள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். இந்தப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் சார்ந்த திட்டம், பெண் முதலீட்டாளர்கள் தங்கள் குறுகிய கால நிதி இலக்குகள் மற்றும் தேவைகளுக்காக முதலீடு செய்யத் தொடங்க உதவும்.

மற்ற சிறு சேமிப்பு திட்டங்களான சுகன்யா சம்ரித்தி யோஜ்னா போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் முதலீட்டு வரம்பு உள்ளது. மேலும் 21 ஆண்டுகள் நீண்ட லாக்-இன் காலமும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Mahila samman savings certificate deposit limit and interest rate