பேங்க் ஆஃப் இந்தியா மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்திய முதல் பொதுத்துறை வங்கியாகும்.
இது தொடர்பாக பேங்க் ஆஃப் இந்தியாவின் செய்திக்குறிப்பில், “இந்தத் திட்டத்தை அதன் அனைத்து கிளைகளிலும் செயல்படுத்தும் முதல் வங்கி இதுவாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் முன்பு தபால் நிலையங்களில் மட்டுமே கிடைத்தது.
பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு மூலம் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தகுதியான தனியார் துறை வங்கிகள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை, 2023ஐ அறிமுகப்படுத்திவருகின்றன.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்
ஒரு பெண் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழை தொடங்கலாம் அல்லது பாதுகாவலர் இளம் பெண் அல்லது சிறுமிகள் சார்பாக கணக்கைத் தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000 ஆகும். மேலும், மொத்த முதலீட்டு உச்சவரம்புக்கு உட்பட்டு தனிநபர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் இடையே மூன்று மாத இடைவெளியுடன் பல கணக்குகளை தொடங்கலாம்.
இதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். திட்டத்தின்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“