Fixed Deposits | Post Office Savings Scheme | ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD) எப்போதும் மக்களுக்கான பாதுகாப்பான மற்றும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
மேலும், ஃபிக்ஸட் டெபாசிட்களை விட சிறந்த வருமானத்தை அளிக்கும் பல விருப்பங்கள் இருந்தாலும், பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்கள் பெரும்பாலும் எஃப்.டி.-ஐ தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் ஒரு பெண் இரண்டு வருடங்களுக்கு சிறந்த முதலீட்டு விருப்பத்தை எதிர்பார்க்கிறார் என்றால், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு பதிலாக, அவள் தனது பணத்தை மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், அவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட மிகச் சிறந்த வருமானத்தைப் பெற முடியும்.
2 ஆண்டுகள் முதலீடுக்கு பல்வேறு வங்கி மற்றும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டங்களின் வட்டி விதிகங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
- தபால் அலுவலகத்தில் வட்டி - 7.0%
- ஸ்டேட் வங்கியில் வட்டி - 6.80%
- கனரா வங்கியில் வட்டி - 6.85%
- பாங்க் ஆஃப் இந்தியாவில் வட்டி – 7.25%
- பாங்க் ஆஃப் பரோடாவில் வட்டி - 6.75%
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி – 6.80%
- மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் வட்டி – 7.5%
மகிளா சம்மான் நிதி திட்டத்தை தொடங்குவது எப்படி?
எந்தவொரு பெண்ணும் தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் MSSC இன் கீழ் தனது கணக்கைத் திறக்கலாம்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர் MSSC கணக்கைத் திறக்கலாம்.
ஒரு கணக்கைத் திறக்கும் போது, நீங்கள் படிவம்-1 ஐ நிரப்ப வேண்டும், இதனுடன், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வண்ண புகைப்படங்கள் போன்ற KYC ஆவணங்கள் உங்களுக்குத் தேவைப்படும். இந்த திட்டத்தின் பலனை 2025 ஆம் ஆண்டு வரை பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“