இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (அக்.18) உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 549.62 புள்ளிகள் உயர்ந்து, 58960.60 என வர்த்தகத்தை நிறைவு செய்தது. 50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 175.15 புள்ளிகள் அதிகரித்து 17486.95 என வணிகத்தை நிறைவு செய்தது.
மற்ற ஆசிய சந்தைகள் ஆன சியோல், டோக்கியோ மற்றும் ஹாங் ஹாங் பங்குச் சந்தைகளிலும் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
எஸ்.பி.ஐ., டாப்
இன்றைய வர்த்தகத்தில் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ., என இரண்டு சந்தைகளிலும் முறையே 3.45 மற்றும் 3.37 சதவீதம் உயர்வை கண்டது.
எனினும், மும்பை பங்குச் சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, என்டிபிசி, சன் பார்மா, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
பார்தி ஏர்டெல் பங்குகள் 2.25 சதவீதம் லாபம் பார்த்தன. ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் 0.19 சதவீதம் உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
மறுபுறம் பஜாஜ் ஆட்டோ, பபிசிஎல், பிரிட்டானியா, திவிஸ் லேப், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“