scorecardresearch

சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு.. இன்றைய நிலவரம்

இன்றைய பங்கு வர்த்தகத்தில் சந்தை 0.25 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளது.

சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு.. இன்றைய நிலவரம்
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் நவம்பர் 22 2022

புதன்கிழமை (அக்.19) பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை 146.59 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 59107.19 எனவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி42.10 உயர்ந்து 17,529.05 எனவும் வணிகத்தை நிறைவு செய்தது.

மும்பை பங்குச் சந்தை

30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்சிஎல் டெக், இந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டர்போ, மாருதி அண்ட் மாருதி, மாருதி சுசூகி, என்டிபிசி, எஸ்பிஐ, சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகிந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

தொடர்ந்து ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஃஎப்சி, ஹெச்டிஃஎப்சி வங்கி , ஐடிசி, நெஸ்லே, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கோ, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் இயங்கின.

தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ஸ்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

ஸ்பைஸ்ஜெட் பங்குகள்
ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியர்களின் மாத சம்பளம் தொடர்பான சில நல்ல சமிக்ஞைகள் வெளியான நிலையில் அந்நிறுவன பங்குகள் 1 சதவீதம் வரை உயர்வை கண்டன.

இன்றைய பங்கு வர்த்தகத்தில் சந்தை 0.25 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளது. கடந்த 4 நாள்களாக இந்திய சந்தைகள் உயர்வில் வர்த்தகம் ஆகி வருகின்றன.
அதேபோல் மற்ற ஆசிய சந்தைகளும் லாபத்தில் வணிகமாகி வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Markets extend rally for 4th straight day

Best of Express