Advertisment

ஹோம் லோன் கட்ட மிஸ் பண்ணிடீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க!

மூன்று EMIகளை செலுத்தத் தவறிய பிறகு, புதிய கடனைப் பெறுவது கடினமாக இருக்கலாம், ஆனால் இது பாதையின் முடிவு அல்ல.

author-image
Jayakrishnan R
New Update
Missed paying your home loan EMI Here is what you can do

EMI கட்டணத்தைத் தவறவிட்டால், உடனடியாக உங்கள் வங்கிக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

வீட்டுக் கடன்கள் மிக நீண்ட காலத்திற்கு EMI-களை திருப்பிச் செலுத்தும் பெரிய பொறுப்புடன் வருகின்றன. வீட்டுக் கடன் வாங்குபவர்கள் பொதுவாக நிதி ஒழுக்கத்துடன் இருக்குமாறும், தவறாமல் மாத EMIகளைத் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இருப்பினும், சில நேரங்களில் இவ்வளவு நீண்ட திருப்பிச் செலுத்தும் காலத்தில், அவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட EMI பேமெண்ட்டுகளை தவறவிட நேரிடலாம்.

இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது? அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆபத்துக்களை விரைவில் கடக்க உதவும் வழிகள் இங்கே உள்ளன.

Advertisment

எவ்வாறு பாதிக்கிறது?

நீங்கள் EMI-களை செலுத்தத் தவறியிருந்தால் மற்றும் மூன்று மாதங்களுக்குள் கட்டணத்தை மீட்டெடுக்க முடியாவிட்டால் நிதி அபாயம் ஏற்படும்.

அந்த வகையில், வீட்டுக் கடன் EMI கட்டணத்தைத் தவறவிடுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை உடனடியாகப் பாதிக்கும். இதனால், உங்கள் CIBIL ஸ்கோர் 40 முதல் 80 புள்ளிகள் வரை குறைவதை நீங்கள் கவனிக்கலாம். மேலும், EMIயில் 2% வரம்பில் தாமதமாகப் பணம் செலுத்தியதற்கான அபராதமும் விதிக்கப்படலாம்.

பணம் செலுத்தாத நிகழ்வு உங்கள் கிரெடிட் அறிக்கையில் பிரதிபலிக்கும். அது உங்கள் கடன் தகுதியில் கேள்விக்குறியை வைக்கலாம். எதிர்காலத்தில் நீங்கள் EMI-களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்திய பிறகும், வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகளை தடுக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்

EMI கட்டணத்தைத் தவறவிட்ட பிறகு, உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவித்து அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். நீங்கள் எந்த தாமதமும் இல்லாமல் EMI-ஐ திருப்பிச் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

நீங்கள் உண்மையாகவே EMI-ஐத் திருப்பிச் செலுத்த மறந்துவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க, EMI-க்களுக்கான ஆட்டோ டெபிட்டிற்காக உங்கள் வங்கிக் கணக்கை இணைப்பது போன்ற ஒரு நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்.

வேலை இழப்பு அல்லது வருமான இழப்பு போன்ற கடினமான நிதி நிலைமை காரணமாக நீங்கள் பணம் செலுத்தத் தவறினால், நிதி ரீதியாக நிலைமையைச் சமாளிக்க நீங்கள் விரைவாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

புதிய வேலையைத் தேடத் தொடங்கலாம், தேவைப்பட்டால், உங்களின் குறைந்த வருவாய் முதலீடுகளை எடுக்கலாம். பாதிப்பைக் குறைக்க, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்குமாறு கடனளிப்பவரிடம் நீங்கள் கோரலாம், இதனால் EMI சுமை குறைகிறது,

அதன்படி 6 மாதங்கள் வரை கால அவகாசத்தை அனுமதிக்குமாறு உங்கள் வங்கியிடம் நீங்கள் கோரலாம். நீங்கள் இருக்கும் வீட்டை விட்டுவிட்டு வாடகைக்கு சிறிய வீட்டிற்கு மாறலாம். உங்கள் வீட்டை இழக்காமல் EMI கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வேறுபட்ட வாடகை உங்களுக்கு சில நிதி உதவிகளை அளிக்கும்.

மீண்டு(ம்) சரியான பாதைக்கு திரும்புதல்

உங்கள் தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்றவாறு பட்ஜெட்டை உருவாக்கி, மெதுவாக அதை மேம்படுத்த முயற்சிக்கவும்.

மூன்று EMIகளை செலுத்தத் தவறிய பிறகு, புதிய கடனைப் பெறுவது கடினமாக இருக்கலாம், ஆனால் இது பாதையின் முடிவு அல்ல.

மோசமான நிதி நிலைமையால் குழப்பமடையாமல் உங்கள் நிதியைத் திட்டமிடுவது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment