பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதங்கள் வங்கிகள் வழங்கும் நிதி திட்டங்களை விட சிறந்ததாக உள்ளன.
அந்த வகையில், சிறு சேமிப்புத் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), கிசான் விகாஸ் பத்ரா மற்றும் பல்வேறு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டங்கள் போன்ற வைப்புத் திட்டங்கள் அடங்கும்.
பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் தற்போதைய வட்டி விகிதங்கள் இதோ
தபால் அலுவலக வைப்புத் திட்டங்கள்
5 ஆண்டு கால வைப்பு: 7%
3 ஆண்டு கால வைப்பு: 6.9%
2 ஆண்டு கால வைப்பு: 6.8%
1 ஆண்டு கால வைப்பு: 6.6%
5 ஆண்டு தொடர் வைப்பு: 5.8%
மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு: 7.1%
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): PPF டெபாசிட்டுகளுக்கு அரசாங்கம் வழங்கும் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): SCSS வைப்புத்தொகைக்கு அரசு வழங்கும் தற்போதைய வட்டி விகிதம் 8% ஆகும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): NSC வைப்புத்தொகைக்கு அரசு வழங்கும் தற்போதைய வட்டி விகிதம் 7% ஆகும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): SSY டெபாசிட்டுகளுக்கு அரசாங்கம் வழங்கும் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): KVP டெபாசிட்டுகளுக்கு அரசாங்கம் வழங்கும் தற்போதைய வட்டி விகிதம் 7.2% ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/