பள்ளித் தோழியை மணக்கிறார் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி!

கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது

உலகின் தலைச்சிறந்த கோடீஸ்வர்  முகேஷ் அம்பானியின் மகன்,  ஆகாஷ் அம்பானி தனது பள்ளித் தோழியை இந்த ஆண்டில் கரம் பிடிக்கிறார்.

கடந்த சில மாதங்களாக  அம்பானியின் மகனான ஆகாஷிற்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாகவும், வைர வியாரியின் மகளை அவர் மணக்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஒரு வழியாக அவர் திருமணம் செய்ய இருக்கும்   பெண் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல்,  கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. வைர வியாபாரி ரஸல் மேத்தா – மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுவைத் தான் ஆகாஷ் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.  இவர், ஆகாஷின் பள்ளித் தோழி ஆவர்.

முதலில், சற்று உடல் பருமனுடன் இருந்த ஆகாஷ் இப்போது ஜிம்மிற்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.  இதற்கும், ஸ்லோகாவின் அட்வைஸ் தான் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர்கள் திருமணத்தை ,  இந்தாண்டு இறுதியில் நடத்த  குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.  மேலும்,  ஆகாஷ் அமானி – சுலோகா மேத்தா திருமணம் 4 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் என்றும், மும்பை ஓப்ராய் விடுதியில் மிகவும் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடி, மணப்பெண்ணான சுலோகா மேத்தாவின் தாயிற்கு நெருங்கிய உறவினர் என்ற தகவலும்  மெல்ல கசிய ஆரம்பித்துள்ளது.

 

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close