கோவை மாநகரில் காய்கறிகள் மற்றும் பழங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் பிரபல செயலியான "MYGROSO செயலி" உணவு டெலிவரியை இன்று (நவ.9) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பாக பங்கேற்ற அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் உணவு டெலிவரியை தொடங்கிவைத்தார்.
கோவை மாநகரின் உள்ள பிரபலமான உணவகங்களை செயலியில் (APP) இணைத்துள்ள MYGROSO நிறுவனம் இன்று உணவு டெலிவரியை தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு விரைந்து பொருள்களை டெலிவரி செய்து கோவை மாநகரில் பிரபலமான இந்த செயலி, பல்வேறு ஆபர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil