புதன்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. அதே நேரத்தில் நிஃப்டி மெட்டல் 0.4% சரிந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 91.62 புள்ளிகள் உயர்ந்து, 61,510.58 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 23.05 புள்ளிகள் உயர்ந்து 18267.25 எனவும் காணப்பட்டது.
அதிக லாபம், நஷ்டமடைந்த பங்குகள்
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அப்போலோ மருத்துவமனை, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எஸ்பிஐ ஆகியவை நிஃப்டி 50 இன் நாளின் மிகப்பெரிய லாபத்தை ஈட்டின.
அதிலும், அப்பல்லோ மருத்துவமனை லாபம் 3% அதிகமாக இருந்தது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் மற்றும் டெக்எம் ஆகியவை நாளின் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தன, அதானி எண்டர்பிரைசஸ் 3.4% சரிந்தது.
தங்கம் வெள்ளி நிலவரம்
இன்றைய வர்த்தகத்தில் உலகளாவிய போக்குகளின் விளைவாக தங்கத்தின் விலை எதிர்மறையாக இருந்தது, அதே நேரத்தில் வெள்ளி விலை 0.13% குறைந்தது.
ரூபாய் மதிப்பு
பாசிட்டிவ் ஈக்விட்டி சந்தைகள், கச்சா எண்ணெய் விலை குறைதல் மற்றும் கிரீன்பேக்கில் பின்வாங்கல் போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்தது.
மீடியா பங்குகள்
நிஃப்டி மீடியா பங்குகள் 1.76% உயர்ந்து நேர்மறையான வர்த்தகத்தில் காணப்பட்டது. டிஷ் டிவி (3.19% வரை), சன் டிவி (2.45% வரை), ஜீ என்டர்டெயின்மென்ட் (2.05% வரை) மற்றும் PVR (1.9% வரை) ஆகியவை குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
வங்கி பங்குகள்
வங்கி பங்குகளை பொறுத்தமட்டில் ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி தொடர்ந்து இரண்டாவது நாளாக லாபம் அடைந்து, பச்சை நிறத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil