இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.50 ஆக இருந்தது. இதற்கு முன்பு 81.52 ஆக இருந்தது.
அதானி பங்குகள் இன்று மீண்டன. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை ஏற்ற- இறக்கத்துடன் காணப்பட்டன.
மேலும் இந்திய பங்குச் சந்தைகளை பொறுத்தமட்டில் தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 50 குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து 17,650 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 170 புள்ளிகள் அதிகரித்து 59,500 ஆகவும் முடிந்தது.
இரண்டு குறியீடுகளும் முந்தைய அமர்வில் 0.5% சரிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 3.5%, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.6% சரிந்தன.
தகவல் தொழில்நுட்பம் ஒரு சதவீதம் உயர்ந்தது, பஜாஜ் ஃபைனான்ஸ் 4%க்கும் அதிகமாகவும், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் 2%க்கும் அதிகமாகவும் உயர்ந்தன. பவர் கிரிட் 3% வீழ்ச்சியடைந்தது, அதைத் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ 2% க்கும் அதிகமாக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் ரூ.131.4 (4.76 சதவீதம்) அதிகரித்து ஒரு பங்கி்ன் விலை ரூ.2892.85 ஆகவும், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல் 0.05 உயர்ந்து 597 ஆகவும் காணப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/