Advertisment

இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி: கரகாட்டம் ஆடிய கரடி!

இன்றைய வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

சென்செக்ஸ் 0.6% சரிந்து 65,151.02 ஆக காணப்பட்டது.

இந்தியப் பங்குச் சந்தைகள், எதிர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் புதன்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன. கிட்டத்தட்ட உள்நாட்டு குறியீடுகள் 1% க்கு மேல் சரிந்து காணப்பட்டன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 207 புள்ளிகள் அல்லது 1.05% சரிந்து 19,526.55 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 676.53 புள்ளிகள் அல்லது 1.02% குறைந்து 65,782.78 ஆகவும் இருந்தது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 596.80 புள்ளிகள் அல்லது 1.31% சரிந்து 44,995.70 ஆகவும், நிஃப்டி ஆட்டோ 1.66% சரிந்தும் காணப்பட்டது.

தொடர்ந்து, நிஃப்டி பிஎஸ்யூ வங்கி 2.61%, நிஃப்டி ஐடி 0.81% சரிந்து வர்த்தகமானது. நிஃப்டி-50 இல் டிவிஸ் லேபரட்டரீஸ், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் என்டிபிசி ஆகியவை நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment