scorecardresearch

ஆரம்பமே அமர்க்களம்.. சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் தொடங்கின. சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமாகிவருகிறது.

Share Market News Today June 1 2023
இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து காணப்பட்டன.

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை (மே 11) லாபத்தில் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்படுகிறது.
பேங்க் நிஃப்டி 43500 ஆக காணப்படுகிறது. அதேநேரத்தில் அதானி எண்டர்டெயின்ட் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை லாபத்தில் வர்த்தகமாகிவருகின்றன.

இதற்கிடையில், சிங்கப்பூர் எக்சேஞ்சில் (SGX) நிஃப்டி ஃபியூச்சர் இன்று அதிகாலை வர்த்தகத்தில் 30 புள்ளிகள் அல்லது 0.16% உயர்ந்து 18,388 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மற்ற ஆசிய சந்தைகளும் கலப்பில் வர்த்தகத்தை தொடர்கின்றன. அந்த வகையில், ஹாங்காங்கின் ஹாங் செங் 0.07%ம், ஜப்பானின் நிக்கேய் 225 0.2%ம் சரிந்தன.

சீனாவின் ஷாங்காய் கூட்டு 0.17% ம், தென் கொரியாவின் KOSPI 0.44%ம் உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் NSE நிஃப்டி 49.15% அல்லது 0.27% உயர்ந்து 18,315.1 ஆகவும், BSE சென்செக்ஸ் 178.87 புள்ளிகள் அல்லது 0.29% உயர்ந்து 61,940.2 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty jumps above 18300 sensex gains 120 pts

Best of Express