Advertisment

மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் சரிவு.. இந்திய சந்தைகள் உயர்வு

செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் லாபத்தில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Business

Markets Wrap Tue 21 Mar 2023

இன்றைய பங்கு வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 119.10 புள்ளிகள் அல்லது 0.70% உயர்ந்து 17,107.50 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 445.73 புள்ளிகள் அல்லது 0.77% உயர்ந்து 58,074.68 ஆகவும் இருந்தது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 532.75 புள்ளிகள் அல்லது 1.35% உயர்ந்து 39,894.70 ஆகவும், நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 1.46% ஆகவும், நிஃப்டி பிஎஸ்யூ வங்கி 1.65% உயர்ந்தும் காணப்பட்டது.

எனினும், நிஃப்டி ஐடி 0.98%, நிஃப்டி எஃப்எம்சி 6% சரிந்தது. நிஃப்டி 50 இல் ஹெச்டிஎஃப்சி லைஃப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

எனினும், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, டெக் மஹிந்திரா மற்றும் டிவிஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

இந்திய ரூபாய் மதிப்பு

மதியம் 2:40 மணிக்கு (IST) அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 0.03% சரிந்து 82.66 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய்

ஏப்ரல் டெலிவரிக்கான WTI கச்சா 0.9% அதிகரித்து $68.25 ஆக இருந்தது, மே டெலிவரிக்கான ப்ரெண்ட் கச்சா 0.79% உயர்ந்து $74.37 மதியம் 2:45 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.

தங்கம், வெள்ளி

ஏப்ரல் டெலிவரிக்கான மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் 243 புள்ளிகள் அல்லது 0.41% குறைந்து ரூ.59,263 ஆகவும், மே டெலிவரிக்கான வெள்ளி 81 புள்ளிகள் அல்லது 0.12% குறைந்து மதியம் 2:40 மணிக்கு (IST) ரூ.68,757 ஆகவும் இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment