Advertisment

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சம்: 19 ஆயிரத்தை நெருங்கிய நிஃப்டி

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 500 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 19 ஆயிரத்தையும் நெருங்கின.

author-image
WebDesk
New Update
Nifty settles above 19400 Sensex gains 160 pts

உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 154.70 புள்ளிகள் அல்லது 0.82% உயர்ந்து 18,972.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 499.39 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து 63,915.42 ஆகவும் இருந்தது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 206.30 புள்ளிகள் அல்லது 0.47% அதிகரித்து 44,327.80 ஆகவும், நிஃப்டி ஆட்டோ 0.75% உயர்ந்து, ஃபின் நிஃப்டி 0.54% உயர்ந்தது.

அதேபோல், நிஃப்டி மெட்டல் 1.36% உயர்ந்து, நிஃப்டி பார்மா 1.46% உயர்ந்தன.

நிஃப்டி 50 இல் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

எச்டிஎஃப்சி லைஃப், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

IndiGo mcap பங்குகள்

இண்டிகோ மிட்கேப் பங்குகள் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை ரூ.2621.55 ஆக இருந்தது.

தற்போது, நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment