வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. அந்த வகையில், மும்பை பங்குச் சந்தை 1.20 சதவீதமும், தேசிய பங்குச் சந்தை 1.01 சதவீதமும் உயர்வை கண்டன.
30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த் வங்கி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
எனினும் ஹெச்.சி.எல்., டெக், ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் 2 சதவீதத்துக்கும் மேலும், ஹெச்.டி.எஃப்.சி., வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் 3 சதவீதத்துக்கும் மேலும் லாபம் பார்த்தன.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிரிட்டானியா, சிப்லா, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.சி.எல்., டெக் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
இன்றைய (அக்.14) பங்கு வர்த்தகத்தில் நிஃப்டி 171.35 புள்ளிகள் அதிகரித்து 17185.70 ஆகவும், சென்செக்ஸ் 684.64 புள்ளிகள் அதிகரித்து 57,919.97 புள்ளிகளாகவும் உள்ளது.
இந்திய சந்தைகள் உலகளாவிய சந்தைகளை பின்தொடர்கின்றன. இங்கிலாந்தில் வரி குறைப்பு உள்ளிட்ட சாதகமான சூழல்கள் தொடர்ந்தன.
எனினும், குறுகிய கால சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே, நியாயமான விலையில் கிடைக்கும் நல்ல தரமான நிறுவனங்களில் முதலீடு செய்வதில் உறுதியாக இருக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil