Ola Electric | ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை குறைப்பை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. ஓலா (Ola) கடந்த மாதம் எஸ்1 எக்ஸ் ப்ளஸ் (S1 X+), எஸ்1 எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தது.
பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களின் தொடர் விலைக் குறைப்புகளைக் கண்டன.
இதில், சமீபத்தில் இணைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.25,000 வரை குறைத்துள்ளதாக அறிவித்து இருந்தது.
இந்தச் சலுகைகள் பிப்ரவரி மாதம் வரை செல்லுபடியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சலுகைகள் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
சலுகையை தொடர்ந்து, ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள ஓலா எஸ்1 எக்ஸ் ப்ளஸ் (S1 X+) ரூ.85 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. அதேபோல், ரூ.1.20 லட்சம் கொண்ட எஸ்1 எஸ்1 ஏர் (S1 Air) ரூ.1.05 லட்சத்துக்கும், ரூ.1.48 லட்சம் மதிப்பிலான எஸ்1 ப்ரோ (S1 Pro) ரூ.1.30 லட்சத்துக்கும் கிடைக்கும்.
ஜனவரி 2024 இல் இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவு ஆண்டுக்கு ஆண்டு 26 சதவீத வளர்ச்சியைக் கண்டது. ஜனவரி 2024 இல், EV இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 81,343 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“