மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்-ஐ பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் பழைய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. 80சி விரி விலக்கு ரூ.1.50 லட்சமாக தொடர்கிறது.
இது சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், எதிர்பார்த்தது போல் ஆன்லைன் வங்கி பணப் பரிமாற்ற அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் கூட்டு வங்கிப் பரிவர்த்தனைகளில் ரூ.15 லட்சம் வரை பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/