Advertisment

ஓய்வூதிய திட்டங்கள் குறித்து யோசிக்கின்றீர்களா? இந்த 5 விஷயங்கள் மிகவும் முக்கியம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நான்கில் ஒருவர், தங்களின் சேமிப்பின் 50% வெறும் 10 ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும் பலர் ஓய்வூதிய காலத்திற்காக முதலீடு செய்வதில் பெரும் விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து யோசிக்கின்றீர்களா? இந்த 5 விஷயங்கள் மிகவும் முக்கியம்

Pension Planning 5 important points: இன்றைய சமூகத்தில் ஏற்பட்டு வரும் அனைத்து நிகழ்வுகளும் உயர்ந்து வரும் விலைவாசியும் ஓய்வுக்கு பிறகு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற வருத்ததையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொருவரும் நிச்சயமாக ஓய்வூதிய திட்டங்களில் கவனம் செலுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீங்கள் மிகவும் விரைவாகவே சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், இளமை காலத்திலேயே முதலீடு செய்வதும் பணத்தை சேமிப்பதும் முறையாக காப்பீடுகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை பெறுவதும் உங்களுக்கு முதுமை காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். ஓய்வூதிய திட்டங்கள் குறித்து நீங்கள் யோசனை செய்து கொண்டிருந்தால் இந்த 5 விசயங்களை கணக்கில் கொள்ளவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நான்கில் ஒருவர், தங்களின் சேமிப்பின் 50% வெறும் 10 ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும் பலர் ஓய்வூதிய காலத்திற்காக முதலீடு செய்வதில் பெரும் விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Advertisment

பணவீக்கத்திற்கு பிந்தைய நேர்மறையான வருமானம்

ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்யும் போது அல்லது சேமிக்கும் போது, பணவீக்கத்தை காரணியாக்குவது முக்கியம். இத்தகைய முதலீடுகள் பணவீக்கத்திற்குப் பிந்தைய நேர்மறையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பணவீக்க விகிதம் 6% p.a ஆக இருக்கும் பட்சத்தில் இன்று ரூ. 100-ன் மதிப்பு ஒரு ஆண்டுக்கு பிறகு ரூ. 94 ஆக இருக்கும். எனவே, ஓய்வூதிய நிதியில் முதலீடு 6% க்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ வருமானத்தை அளித்தால், அது ஓய்வூதியத்தைத் திட்டமிடுவதற்கான சாத்தியமான விருப்பமாக இருக்காது

அதிக அபாயங்களை பார்க்க வேண்டாம்

ஓய்வூதியத் திட்டமிடல் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அதிக அபாயங்களைத் தேடக்கூடாது என்று கூறுகிறார்கள். முதலீடுகளில் உத்தரவாதமான வருவாயைக் கடைப்பிடிப்பது முக்கியம், மேலும், அதிகரித்து வரும் சந்தை ஏற்ற இறக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முதலீடுகள் குறைந்த ஆபத்துள்ள கார்பஸை பிரதிபலிக்க வேண்டும்.

போதுமான ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும்

ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஓய்வுக்குப் பிந்தைய போதுமான ஓய்வூதிய வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அன்றைய சூழலில் ஏற்படும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இவை இருக்க வேண்டும்.

annuity - சலுகை

சில திட்டங்கள் ஓய்வூதியத்திற்குப் பிந்தைய ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே annuity-ஐ வழங்கும். பல திட்டங்கள் ஆண்டு முழுவதும் annuity-ஐ தரக் கூடியவை. மற்றொரு பொருத்தமான பரிசீலனையானது வருடாந்திர தொகை ஆகும். பல்வேறு ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன, அவை வழங்கப்படும் வருடாந்திர அடிப்படையில் வேறுபடுகின்றன. ஒரு சில திட்டங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகையினை வழங்குகிறது. ஒரு சில திட்டங்கள் இறப்பதற்கு முன்பு வரை தேவையான அனைத்து வருடாந்திர தொகையை வழங்கி வருகிறது. ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்தாலும் அவர் வாரிசாக நியமித்திருக்கும் நபர் இந்த annuity-ஐ பெறவும் சில திட்டங்கள் வழிவகை செய்கின்றன.

வரி

ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணி வரியாகும். ஓய்வூதியத் திட்டங்களின் வகை மற்றும் முதலீட்டாளரின் ஆபத்து அடிப்பையில் வரிவிதிப்பு அம்சம் மாறுபடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment