PM Kisan 12th installment: பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ் 12ஆவது தவணையாக தீபாவளிக்கு முன்னதாக விவசாயிகளின் கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி (பி.எம்.,-கிஷான்) திட்டத்தை விவசாயிகளுக்காக தொடங்கினார். இந்தத் திட்டத்தின் 12ஆவது தவணை அக்டோபர் 17ஆம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 11ஆவது தவணை நிதிப் பலனை பிரதமர் நரேந்திர மோடி மே 31ஆம் தேதியன்று வெளியிட்டார்.
அப்போது, 10 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளிகள் குடும்பங்களுக்கு சுமார் ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் 2019 இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 தொகையானது, மூன்று மாத தவணைகளில் தலா ரூ.2000 வீதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
முன்னதாக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 12ஆவது தவணை செலுத்தப்படும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil