/indian-express-tamil/media/media_files/2025/10/16/pm-kisan-21st-instalment-date-kisan-samman-nidhi-pm-kisan-latest-updates-pm-kisan-diwali-2025-10-16-13-31-47.jpg)
PM KISAN 21st Instalment Date| Kisan Samman Nidhi| PM Kisan latest updates
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், 21-வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளுக்கு தீபாவளிப் பண்டிகைக்குள் வந்து சேர உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே பணம் அனுப்பத் தொடங்கியுள்ளதால், மற்ற மாநில விவசாயிகளுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமதமின்றி ரூ.2,000 பெற, விவசாயிகள் உடனடியாக தங்கள் e-KYC-ஐ முடிக்க வேண்டியது அவசியம்.
ஆன்லைனில் ஒடிபி வழியே:
அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in-க்கு சென்று, 'Farmers Corner' பிரிவில் உள்ள 'e-KYC' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
'Get OTP' என்பதைக் கிளிக் செய்து, மொபைலுக்கு வரும் OTP-ஐப் பதிவிட்டு சப்மிட் செய்யவும். இந்த முறையில் இ-கேஒய்சி 24 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்படும்.
பிஎம் கிசான் ஆப் மூலம் முக அங்கீகாரம் (Face Recognition):
பி.எம் கிசான் (PM-KISAN) மொபைல் ஆப் மற்றும் ஆதார் முக அங்கீகாரம் (Aadhaar Face RD) ஆப்-ஐப் பதிவிறக்கவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
Beneficiary Status ஆப்ஷனுக்குச் சென்று, அதில் உள்ள e-KYC-க்கு செல்லவும்.
ஆதார் எண்ணை உள்ளிட்டு 'Face Authentication' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மொபைல் கேமராவைப் பயன்படுத்தி உங்கள் முகத்தைச் ஸ்கேன் செய்வதன் மூலம் வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு இ-கேஒய்சி-ஐ நிறைவு செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.