பிரதமர் நரேந்திர மோடியால், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM KISAN) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ஒவ்வொரு விவசாய குடும்பங்களுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் இதுவரை, 11 தவணைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் 12ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.17) விடுவித்தார்.
அடு்த்த வாரம் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், நிதிக்காக காத்திருக்கும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இது என்ன நல்ல செய்தியாக இருக்கும் என்றும் நம்பலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.16 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 11 கோடி விவசாயிகள் பலன் பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.16 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் pmkisan-ict@gov.in. and pmkisan-funds@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 011-24300606,155261 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil