/tamil-ie/media/media_files/uploads/2022/05/save-money-4-unsplash.jpg)
மாதம் ரூ.2 ஆயிரம் சேமித்தால் லட்சாதிபதி ஆகலாம்.
அவசர தேவைக்கு பணம் எடுக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் கிடைக்கக்கூடிய திட்டமாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) உள்ளது.
இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கினார்.
இந்தக் கணக்கு தொடங்கியவர்களுக்கு, ரூபே கார்டும் வழங்கப்படும். இதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் ஜன் தன் யோஜனா கீழ் தொடங்கப்படும் கணக்குகளின் என்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தத் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் வரை ஒவர் டிராப்ட் வழங்கப்படுகிறது. முன்னர் இது ரூ.5 ஆயிரமாக இருந்தது. தற்போது இது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்குள் மட்டும் ஆகியிருந்தால் ரூ.2 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது ஓவர் ட்ராஃப் பெறும் வயது 60இல் இருந்து 65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கின் மூலம் விபத்து காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்களை பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள இந்திய வங்கிகளில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கணக்கு தொடங்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.