/tamil-ie/media/media_files/uploads/2023/01/savings_Investment.jpg)
ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு வட்டி மாறுபடும்.
தபால் நிலைய கால வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதங்களுடன் இணைந்து வங்கிகளும் நிலையான வைப்புத் தொகை சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. போஸ்ட் ஆபீஸ் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் வங்கி ஃபிக்சட் டெபாசிட் சேமிப்பில் எதில் அதிக வட்டி கிடைக்கிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம். தபால் நிலைய எஃப்.டி மற்றும் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகிய வங்கிகள் வழங்கும் எஃப்.டி வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தபால் நிலைய எஃப்.டி திட்டம்
தபால் நிலைய எஃப்.டி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை அரசு உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதத்தின் படி 1 ஆண்டு கால வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 6.6% லிருந்து 6.8% ஆகவும், 2 ஆண்டு கால வைப்புத்தொகை 6.9% லிருந்து 7% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 3 ஆண்டு கால வைப்புத் தொகை திட்டத்திற்கான வட்டி 6.9% இலிருந்து 7% ஆகவும், 5 ஆண்டு கால வைப்புத் தொகை திட்டத்திற்கான வட்டி அதிகபட்சமாக 7% லிருந்து 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 ஆண்டு முதல் 2 ஆண்டு கால வரையிலான வைப்புத் தொகை திட்டத்திற்கு 6.8% வட்டி வழங்குகிறது. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7% வட்டியும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் 6.50% வட்டியும் வழங்குகிறது. இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி 1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையிலான காலத்திற்கு 6.60% வட்டியும், 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான திட்டத்தில் 7.10% வட்டியும், 18 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகை திட்டத்தில் 7% வட்டியும் வழங்கி வருகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 1 ஆண்டு முதல் 15 மாதங்கள் வரையிலான குறைவான கால வைப்புத் தொகை திட்டத்திற்கு 6.70% வட்டி விகிதத்தையும், 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் 7.10% வட்டியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் 7% வட்டி வழங்குகிறது.
பி.என்.பி
பஞ்சாப் நேஷனல் வங்கி 1 ஆண்டு முதல் 665 நாட்கள் வரை 6.80% வட்டியும், 666 நாட்களுக்கு 7.25% வட்டியும் வழங்குகிறது. பி.என்.பி 2-3 ஆண்டு கால திட்டத்தில் 6.75%, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் 6.50% வட்டியும் வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.