குறைந்த முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்; தபால் அலுவலகத் திட்டத்தின் முழுத் தகவல்கள் இதோ…

Post Office PPF scheme get you to crorepati: கோடீஸ்வரராக விருப்பமா? தபால் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்; முழு விவரம் இங்கே

குறைந்த ஆபத்து உள்ள ஒரு நல்ல முதலீட்டுத் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில், நீண்ட கால முதலீட்டில் இந்த திட்டம் உங்களைக் கோடீஸ்வரராக்கும்.

நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய கார்பஸை உருவாக்க PPF திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இந்தத் திட்டமானது, சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாதது மற்றும் வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்படுவதால், இந்த திட்டம் குறைவான அபாயகரமானதாக உள்ளது. PPF திட்டத்தில் தற்போது தபால் அலுவலகம் 7.1 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது.

நீங்கள் தபால் அலுவலகம் அல்லது வங்கி கிளையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கைத் திறக்கலாம். இந்த கணக்கை வெறும் 500 ரூபாயில் துவக்கலாம். இதில், ஆண்டுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்தக் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனாலும், முதிர்ச்சியடைந்த பிறகு, 5 வருட அடிப்படையில் மேலும் நீட்டிக்க வசதி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பிபிஎஃப் கணக்கில் ரூ.12,500 டெபாசிட் செய்து 15 வருடங்கள் சேமித்து வந்தால், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில், உங்களின் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும், அதே சமயம் ரூ.18.18 லட்சம் உங்கள் வட்டி வருமானமாக இருக்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம் மாறும்போது முதிர்வுத் தொகை மாறலாம். PPF இல் கூட்டுத்தொகை ஆண்டு அடிப்படையில் நிகழ்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தத் திட்டத்தில் நீங்கள் கோடீஸ்வரராக மாற விரும்பினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுக் காலத்தை இரண்டு முறை ஐந்ததைந்து ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். அதாவது, இப்போது உங்கள் முதலீட்டு காலம் 25 ஆண்டுகளாகிவிட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் மொத்த கார்பஸ் ரூ. 1.03 கோடியாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உங்களின் மொத்த முதலீடு ரூ. 37.50 லட்சமாக இருக்கும், அதே சமயம் வட்டி வருமானமாக ரூ.65.58 லட்சத்தைப் பெறுவீர்கள். நீங்கள் PPF கணக்கை மேலும் நீட்டிக்க விரும்பினால், முதிர்ச்சிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை நீட்டிக்க முடியாது.

PPF திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம், PPF திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு விலக்கு பெறலாம். PPF இல் பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்வுத் தொகையும் வரியில்லாது. இந்த வழியில், PPF இல் முதலீடு ‘EEE’ பிரிவின் கீழ் வருகிறது. மிக முக்கியமாக, சிறு சேமிப்பு திட்டங்களுக்கு அரசு நிதியுதவி செய்கிறது. எனவே, சந்தாதாரர்களுக்கு இதில் முதலீடு செய்வதில் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். இதில், கிடைக்கும் வட்டிக்கு இறையாண்மை உத்தரவாதம் உண்டு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office ppf scheme get you to crorepati

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com