Advertisment

பேங்க் எஃப்.டி.க்கு சவால் விடும் போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி.; ரூ.1000 வீதம் செலுத்தினால் லட்சத்தில் ரிட்டன்!

போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டத்தில் தற்போது 6.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
Jayakrishnan R
புதுப்பிக்கப்பட்டது
New Update
These banks have hiked FD rates in May 2023

மே 2023 இல் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய சில வங்கிகள் உள்ளன.

Post Office Recurring Deposit calculation : போஸ்ட் ஆஃபீஸ் RD திட்டம் தற்போது வைப்பாளர்களுக்கு 6.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச முதலீடு மாதத்திற்கு ரூ 100 அல்லது ரூ 10 இன் மடங்குகளில் ஏதேனும் ஒரு தொகை ஆகும்.

Advertisment

எனினும், இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. மேலும், தபால் அலுவலக RD திட்டத்தில் உள்ள வைப்புத்தொகைகள் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
கணக்கு வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க அனுமதிக்கப்படுகிறது.

ரூ.5000 மாத பங்களிப்பு

தபால் அலுவலக RD திட்டத்திற்கு மாதாந்திர பங்களிப்பு 5000 ரூபாய் என்றால் 5 ஆண்டுகளில் 3.52 லட்சம் கார்பஸ் கிடைக்கும். கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ.8.32 லட்சமாக இருக்கும்.

ரூ.1000 பங்களிப்பு

தபால் அலுவலக RD திட்டத்திற்கு மாதாந்திர பங்களிப்பு 1000 ரூபாய் என்றால் 5 ஆண்டுகளில்ரூ. 70,431 கார்பஸ் கிடைக்கும் என்று கணக்கீடு காட்டுகிறது.
கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ.1.66 லட்சமாக இருக்கும்.

ரூ.10 ஆயிரம் பங்களிப்பு

தபால் அலுவலக RD திட்டத்திற்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் செலுத்தினால், 5 ஆண்டுகளில் 7.04 லட்சம் கார்பஸ் கிடைக்கும். கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் மொத்த கார்ப்பஸ் ரூ.16.6 லட்சமாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Recurring Deposit Account
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment