பி.பி.எஃப், செல்வமகள் சேமிப்பு வட்டி விகிதம்: இப்போ எவ்வளவு கிடைக்கும்? வெளியான அரசு அறிவிப்பு

சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசு ஒரு பெரிய பரிசை அளிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசு ஒரு பெரிய பரிசை அளிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

author-image
abhisudha
New Update
Post office saving scheme latest interest rates

Post office saving scheme latest interest rates

அக்டோபர் முதல் டிசம்பர் 2025 காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசு ஒரு பெரிய பரிசை அளிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

Advertisment

மத்திய நிதியமைச்சகம் அக்டோபர் 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களின் (Small Savings Schemes) வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. இதில், முக்கியமான திட்டங்களான பிபிஎஃப் (PPF) மற்றும் செல்வமகள் சேமிப்பு (Sukanya Samriddhi Yojana ) உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களின் வட்டி விகிதங்களும் எந்த மாற்றமும் இன்றி, ஜூலை முதல் செப்டம்பர் 2025 காலாண்டில் இருந்த அதே நிலையிலேயே தொடர்கின்றன.

வட்டி விகிதங்களின் நிலவரம் என்ன?

மத்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்த பிறகும் கூட, இந்த சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Post office latest interest rate

ஏன் இந்த முடிவுக்குப் பின்னணி?

சிறு சேமிப்புத் திட்டங்கள் பல கோடி குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை அளிப்பதால், இதன் வட்டி விகிதங்களை மத்திய அரசு நிலையாக வைத்திருப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் ஒரு நல்ல முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

முக்கியமாக, செல்வமகள் சேமிப்பு (SSY) திட்டத்தின் 8.2% வட்டி விகிதம், வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட்களை விட (Fixed Deposits) கவர்ச்சிகரமானதாகவே இருக்கிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வோருக்கு இது ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.

அதேபோல, பொது வருங்கால வைப்பு நிதி (PPF)-இன் 7.1% வட்டி விகிதம், வரிச் சலுகைகளுடன் (Tax Benefits) கூடிய ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக நீடிக்கிறது. ஃபிக்சட் டெபாசிட் (Fixed deposits) 6.9% முதல் 7.5% வரை உள்ளன, அதே நேரத்தில் 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை (recurring deposit) 6.7% இல் நீடிக்கிறது.

ஆகவே, நீங்கள் இந்தப் பிரபலமான அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், இப்போதுள்ள வட்டி விகிதங்கள் டிசம்பர் 31, 2025 வரை அமலில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இதுகுறித்து உங்கள் நிதி ஆலோசகரிடம் பேசுவது நல்லது.

Post Office Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: