Post office savings scheme : கடந்த சில நாள்களாக பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதை அனைவரும் பார்த்து வருகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், பலர் ஆபத்தான பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவதில்லை.
அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, அஞ்சல் அலுவலகம் சிறந்த முதலீட்டு விருப்பங்களைத் தொடர்ந்து வருகிறது. அஞ்சல் அலுவலக சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு அதிக வருமானத்தை கொடுக்க உதவுகிறது.
அந்த வகையில் நாம் 3 அஞ்சல திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆர்.டி
அஞ்சல ஆர்.டி. திட்டங்களுக்கு 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டது.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் மாதத்திற்கு ரூ.100 அல்லது ரூ.10 இன் மடங்குகளில் ஏதேனும் தொகையுடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
போஸ்ட் ஆபிஸ் டைம் டொபாசிட்
இது போஸ்ட் ஆபிஸ் எஃப்.டி திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒன்று, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்யலாம்.
திட்டத்தில் 5.5% வட்டி வழங்கப்படுகிறது.
மேலும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கிறது.
இந்தத் திட்டத்தில் ரூ. 1000 செலுத்தி கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
அஞ்சல் அலுவலக என்எஸ்சி திட்டம் 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது. இது 5 வருட காலப்பகுதியில் 6.8% வரை நம்பிக்கைக்குரிய வட்டி விகிதத்தை வழங்கும் 3வது திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 1000 மற்றும் ரூ. 100க்கு மேல் முதலீடு செய்யலாம். டெபாசிட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டம் 5 வருட லாக்-இன் காலம் முடிந்த பின்னரே உங்கள் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
இருப்பினும், சில நிபந்தனைகளின் கீழ், நீங்கள் முதலீடுகளை முன்கூட்டியே திரும்பப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள டெபாசிட்டுகள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெற தகுதியுடையவை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“