குறைந்த முதலீடு... நிறைவான லாபம்...! அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், ஒரு பார்வை

மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்

Post Office Savings Scheme: அஞ்சலகத்தில் குறைந்த முதலீட்டில் கூட சேமிப்புக் கணக்குகளை தொடங்கலாம். இது வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன திட்டங்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: வங்கிக் கணக்கு போன்ற சேமிப்புக் கணக்கு என்றாலும் இந்தியாவின் டாப் வங்கிகள் ஆண்டுக்கு 3.5 சதவீத லாபம் அளிக்கும் நிலையில், இதில் 4 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். வெறும் 20 ரூபாய் இருந்தால் இந்தச் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாய். இணையதள வங்கி மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும்.

5 வருட அஞ்சலக தொடர் வைப்பு நிதி (Recurring Deposit): 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும். 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கு அல்லது RD அல்லது தொடர் வைப்பு நிதி : 5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்.

மேலும் படிக்க – sbi yono : அட்ராசக்க..இனிமே ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்க முடியும்.. எஸ்பிஐ வங்கியின் சூப்பர் திட்டம்!

அஞ்சலக டெர்ம் டெபாசிட்: வங்கிகள் அளிக்கும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதலீடு செய்யும் போது 7.0 சதவீதமும், 2 வருடம் முதலீடு செய்யும் போது 7 சதவீதமும், 3 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது 7 சதவீதம் லாபமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 7.8 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும்.

மேலும் படிக்க – நீங்கள் வீடு கட்ட குறைந்த வட்டியில் லோன் தரும் வங்கிகளில் லிஸ்ட் இதோ!

அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம்: மாதாந்திர வருவாய் திட்டமான இதில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இப்படிச் செய்யும் போது 5 வருடத்திற்குப் பிறகு 7.3 சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவனை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்: இந்தச் சேமிப்புத் திட்டத்தில் 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். 8.7 சதவீத லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.

பிபிஎப்: பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 8 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 12 தவணையில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க – பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு மிகச் சிறந்த வங்கி இதுதான்! ஏன் தெரியுமா?

தேசிய சேமிப்புப் பத்திரம்: இந்தத் திட்டத்தில் 5 வருடம் முதல் 10 வருடம் வரை மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்தால், 8 சதவீத லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் பெற முடியும்.

கிசான் விகாஸ் பத்ரா: இந்தத் திட்டத்தின் கீழ் 7.7 சதவீத வட்டி விகித லாபத்தில் 112 மாதங்களுக்கு முதலீடு செய்யும் போது இரட்டிப்பாக லாபம் கிடைக்கும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா: செல்வ மகள் திட்டம் என்ற பெண் குழந்தைகளுக்கான இந்தச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது, ஆண்டுக்கு 8.5 சதவீத வரி விகித லாபம் கிடைக்கும். தொடர்ந்து 15 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும். ஆண்டுக்குக் குறைந்தது 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை 12 தவணைகளாக முதலீடு செய்யலாம். பெண் குழந்தையின் வயது 21 வயது நிரம்பிய பிறகு செல்வ மகள் சேமிப்பு கணக்கு தானாக மூடப்படும். அதன் பிறகு கூடுதலாக எத்தனை ஆண்டுகள் இந்தக் கணக்கில் பணம் இருந்தாலும் கூடுதல் லாபம் ஏதும் கிடைக்காது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close