ஓய்வூதிய பலன்களைப் பெற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் பல வகையான வருங்கால வைப்பு நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) ஆகியவை சில முக்கிய நிதி திட்டங்கள் ஆகும்.
பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி (PPF)
இந்தத் திட்டத்தில் ஒரு சேவையாளராகவோ அல்லது தொழிலதிபராகவோ அல்லது தொழில்முறை அல்லது சுயதொழில் செய்பவராகவோ இருக்கலாம்.
பான் எண்ணைக் கொண்ட எந்தவொரு நபரும் தனக்கும் அவரது/அவளுடைய மைனர் குழந்தைகளுக்கும் PPF கணக்கைத் தொடங்கலாம்.
ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது முதிர்ச்சியின் போது 5 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம்.
நன்மைகள்
PPF பங்களிப்புகளுக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. இது பொதுவாக நடைமுறையில் உள்ள நிலையான வைப்பு (FD) விகிதங்களை விட அதிகமாகும். மேலும், PPF இல் உள்ள பங்களிப்புகள் முற்றிலும் பாதுகாப்பானவை.
முதிர்ச்சியின் போது, கணக்கு வைத்திருப்பவர் மொத்தத் தொகையையும் மொத்தமாக திரும்பப் பெறலாம் அல்லது பங்களிப்புடன் அல்லது இல்லாமல் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
ஒரு PPF கணக்கு வைத்திருப்பவர் மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை வைப்புத்தொகைக்கு எதிராக கடன் பெறலாம். ஆறாவது ஆண்டு முடிந்த பிறகு பகுதியளவு திரும்பப் பெற அனுமதிக்கப்படும்.
வரி விலக்கு
PPF கணக்குகளுக்கான பங்களிப்புகள் வருமான வரிச் சட்டத்தின் 80C யின் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவை ஆகும். இதுமட்டுமின்றி வட்டிக்கும் வரி விலக்கு அனுமதிக்கப்படும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF)
EPF இன் பலன்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் கிடைக்கும். 20 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் துறை நிறுவனங்கள், மாதத்திற்கு ரூ. 15,000 வரை அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கு EPF ஐ கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதிக அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு இது விருப்பமானது.
EPF இன் கீழ், ஒரு முதலாளி தனது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை வழங்குகிறார், மேலும் முதலாளியும் அதற்கு ஏற்ற பங்களிப்பைச் செய்கிறார். ஒரு பணியாளருக்கு பங்களிப்பு அளவை 12 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க விருப்பம் உள்ளது.
நன்மைகள்
பொதுவாக EPF-ன் மூன்று நன்மைகள் உள்ளன. ஓய்வூதியத்தின்போது முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஊழியருக்கு காப்பீடும் கிடைக்கிறது.
பணியாளரின் முழு 12 சதவீத பங்களிப்பும் EPF க்கு செல்லும் போது, முதலாளியின் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் EPS க்கும் மீதமுள்ள 3.67 சதவீதம் EDLI க்கும் செல்கிறது.
எனவே ஓய்வூதியத்தின் போது மொத்தப் பலன்களைத் தவிர, ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வழக்கமான ஓய்வூதியம் மற்றும் சேவையின் போது காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
வீடு கட்டுதல், மருத்துவ சிகிச்சை, மகன் அல்லது மகளின் திருமணம் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக EPFல் இருந்து பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.
அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) வட்டி விகிதம் அறிவிக்கப்படுகிறது. இந்த விகிதம் தற்போது PPF மற்றும் GPF மீதான வட்டி விகிதங்களை விட அதிகமாக உள்ளது.
வரிவிதிப்பு
அடிப்படை (அடிப்படை+டிஏ) சம்பளத்தில் 12 சதவிகிதம் வரையிலான முதலாளியின் முழுப் பொருந்திய பங்களிப்பும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
முதலாளியின் கூடுதல் பங்களிப்புகள், ஏதேனும் இருந்தால், வரி கணக்கீடுகளுக்காக பணியாளரின் சம்பள வருமானத்தில் சேர்க்கப்படும்.
ஊழியர்களின் பங்களிப்புகள் வருமான வரிச் சட்டத்தின் 80C இன் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவை.
முன்னதாக, வட்டி மற்றும் திரும்பப் பெறுதல் முற்றிலும் வரி விலக்கு ஆகும். இந்நிலையில் கடந்த நிதியாண்டில் இருந்து, 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் ஊழியர்களின் பங்களிப்புக்கான வட்டிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (GPF)
டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு GPF கிடைக்கும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியப் பலன்களைப் பெறலாம்.
தகுதியான அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் குறைந்தபட்சம் 6 சதவீதமும், அதிகபட்சமாக 100 சதவீதம் வரை ஊதியமும் வழங்கலாம்.
EPF போலல்லாமல், அரசாங்கத்தின் பங்களிப்பு இல்லை மற்றும் GPF க்கு ஊழியர்கள் மட்டுமே பங்களிக்கிறார்கள். எனவே, GPF என்பது PPF போன்றது. ஆனால் வித்தியாசங்கள் என்னவென்றால், GPF பொது மக்களுக்கு கிடைக்கவில்லை மற்றும் முதலீட்டு வரம்பு இப்போது ஒரு நிதியாண்டில் 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நன்மைகள்
அரசாங்க நிதியாக இருப்பதால், GPF இல் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் வழங்கப்படும் வட்டி விகிதம் நடைமுறையில் உள்ள FD விகிதங்களை விட அதிகமாக உள்ளது.
GPF இல் திரட்டப்பட்ட பணம் ஓய்வுபெறும் போது மொத்தமாக திரும்பப் பெறப்படலாம். குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பகுதி திரும்பப் பெறுதல் விருப்பங்கள் உள்ளன.
அதில், வீடு கட்டுதல், மருத்துவ சிகிச்சை, மகன் அல்லது மகளின் திருமணம் போன்றவை அடங்கும்.
வரிவிதிப்பு
GPFக்கான பங்களிப்புகள் வருமான வரிச் சட்டத்தின் 80C யின் வரிச் சலுகைகளுக்குத் தகுதியானவை.
முன்னதாக, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வு முழுவதும் வரி விலக்கு இருந்தது.
கடந்த நிதியாண்டில் இருந்து, ஒரு நிதியாண்டில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பங்களிப்புக்கான வட்டிக்கு வரி விதிக்கப்பட்டது.
தற்போது, ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பங்களிப்புகளுக்கு வரி விலக்கு அனுமதிக்கப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.