Advertisment

மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் புதிய ஐ.டி. பூங்கா

மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் புதிய ஐ.டி. பூங்கா உருவாகிவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prestige to develop IT park on 7 acres in Chennai

500 ஏக்கர் பரப்பளவில் ‘டெக் சிட்டி’ (File Photo)

மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் 1.1 மில்லியன் சதுர அடியில் ஐடி பூங்காவை உருவாக்க பெங்களூருவை தளமாகக் கொண்ட பிரெஸ்டீஜ் குழுமம் சென்னையை தளமாகக் கொண்ட டபிள்யூஎஸ் இண்டஸ்ட்ரீஸுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

Advertisment

இந்த நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை ஆகும். 1.1 மில்லியன் சதுர அடி கொண்ட இந்த பூங்கா, டைடல் பூங்கா (1.2 மில்லியன் சதுர அடி) அளவுக்கு பெரியதாக இருக்கும்,

இது, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, ஓஎம்ஆர் மற்றும் ரேடியல் சாலைக்கு அடுத்தபடியாக நகரின் மூன்றாவது ஐடி காரிடாராக உருவாகி வருகிறது.

நந்தம்பாக்கம் மற்றும் போரூரை இணைக்கும் பகுதியில் ஏற்கனவே மணப்பாக்கத்தில் DLF IT பூங்கா உள்ளது, மேலும் L&T (கேபிடாலேண்ட் கையகப்படுத்தியதில் இருந்து), ரஹேஜாஸ் மற்றும் RMZ மூலம் தொழில்நுட்ப பூங்கா மேம்பாடு உள்ளது.

இந்த சாலையில் தற்போது மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment