Mastercard Tamil News: கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை விபரங்களை பராமரிக்காததால், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் ‘டெபிட், கிரெடிட் கார்டு’ சேவைக்கு தடை விதித்தது. மேலும், கட்டணத் தரவைச் சேமிப்பது தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக அந்த நிறுவனத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட வணிகக் கட்டுப்பாடுகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாஸ்டர் கார்டு ஏசியா மற்றும் பசிபிக் Pte லிமிடெட் (Mastercard Asia / Pacific Pte) நிறுவங்களின் இணக்கம் திருப்திகரமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய உள்நாட்டு வாடிக்கையாளர்களை உள்வாங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடனடி அமலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளன” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil