/tamil-ie/media/media_files/uploads/2023/05/ls-2000-money-9.jpg)
திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மே 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Fixed Deposits | ஆர்.பி.எல் (RBL) வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மே 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஆர்.பி.எல் வங்கி 18 முதல் 24 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதத்தை வழங்கியுள்ளது.
அதே காலப்பகுதியில், மூத்த குடிமக்கள் 0.50% கூடுதல் வட்டி விகிதம் பெறுவார்கள். அதாவது 8.50% சம்பாதிப்பார்கள்.
மேலும் சூப்பர் மூத்த குடிமக்கள் (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 0.75% அதாவது 8.75% கூடுதல் வட்டி வருவாய் கிடைக்கும்.
டெபாசிட் காலம் | வட்டி (%) | மூத்தக் குடிமக்கள் வட்டி (%) |
7-14 நாள்கள் | 3.50% | 4.00% |
15-45 நாள்கள் | 4.00% | 4.50% |
46-90 நாள்கள் | 4.50% | 5.00% |
91-180 நாள்கள் | 4.75% | 5.25% |
181-240 நாள்கள் | 5.50% | 6.00% |
241-364 நாள்கள் | 6.05% | 6.55% |
365-452 நாள்கள் | 7.50% | 8.00% |
453- 545 நாள்கள் | 7.80% | 8.30% |
546 நாள்கள்-24 மாதங்கள் | 8.00% | 8.50% |
24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் | 7.50% | 8.00% |
36 மாதங்கள் 1 நாள் முதல் 60 மாதம் 1 நாள் வரை | 7.10% | 7.60% |
60 மாதங்கள் 2 நாள் முதல் 120 மாதங்கள் | 7.00% | 7.50% |
வட்டி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் | 7.10% | 7.60% |
இது தவிர ஆர்.பி.எல் 7.50% முதல் 8% வரையிலான நிரந்தர வைப்பு விகிதங்களை குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் (NRE) ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வழங்குகிறது.
அந்த வகையில், குடியுரிமை பெறாத சாதாரண (NRO) நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்கள் 3.5% முதல் 8% வரை இருக்கும்.
மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் உயர் மூத்த குடிமக்கள் விகிதங்கள் குடியுரிமை பெறாத நிலையான வைப்புகளுக்கு (NRE/NRO) பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.