/indian-express-tamil/media/media_files/2025/05/05/s-arunkumar-retailg-2-373620.jpg)
S.அருண்குமார், நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி - RetailG
மதுரை - வணிகத்தின் முதுகெலும்பான சிறிய மற்றும் பாரம்பரிய வணிகர்களின் எதிர்கால நிலைமையை கருத்தில் கொண்டு, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG – Fast Moving Customer Goods) ப்ராண்டுகள் தங்களது லாப விகிதத்தை (மார்ஜின்) உயர்த்த வேண்டும் என ரீட்டைல் ஜி (RetailG) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அருண்குமார் வலியுறுத்தியுள்ளார்.
"தமிழ் வணிகர்கள்: நம் பொருளாதாரத்தின் அடிப்படையும் பெருமையும்!"
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர்கள் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நாளில், தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல், வணிகர்கள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து இந்த மாநாடுகளில் கலந்து கொள்வார்கள். இதில் வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். சில சமயங்களில், வணிகர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கடையடைப்பும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தமிழக வணிகர் தினமான இன்று, வணிகளின் நிலை குறித்து, ரீட்டைல் ஜி (RetailG) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அருண்குமார் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். இதில், வணிகர்களின் எதிர்கால நிலைமையை கருத்தில் கொண்டு, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG – Fast Moving Customer Goods) ப்ராண்டுகள் தங்களது லாப விகிதத்தை (மார்ஜின்) உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் வாடகை 60%–80%, மின்சாரம் 40%–50%, ஊதியம் 70%–90% வரை உயர்ந்துள்ளன. ஆனால், வணிகர்களின் மார்ஜின் இன்னும் 8%–12% இடையே தான் உள்ளது. இது சீரான வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், மளிகை கடைகள், புரோவிஷன் ஸ்டோர் போன்ற பாரம்பரிய வணிகர்கள் இன்று ஓரளவுக்கே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.
இந்நிலையில், கார்ப்பரேட் மற்றும் மற்ற துறைகளில் ஊழியர்களுக்கு ரூ15,000–ரு25,000 மாத சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், இந்த வணிகத்துறையில் ரூ8,000–ரூ15,000 அளவில்தான் உள்ளது. வணிகர்கள் ஊழியர்களை நியாயமான முறையில் ஆதரிக்க விரும்புகிறார்கள். ஆனால் குறைந்த மார்ஜின் காரணமாக அவர்களின் கையில் அது சாத்தியமாகவில்லை.
மேலும், (National chains stores, online Brands )தேசிய அளவிலான கார்ப்பரேட் சில்லறை நிறுவனங்கள் அதிக அளவில் ப்ராண்டுகளிடம் இருந்து மார்ஜின், தள்ளுபடி விலைகள் மற்றும் சலுகைகள் பெறுகின்றன. ஆனால், பல தலைமுறைகள் கடந்து, அதே இடத்தில் உள்ள சிறிய வணிகர்கள் – தங்களது முயற்சியால் ப்ராண்டுகளை வளர்த்தவர்கள். இப்போது அந்த வாய்ப்புகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
“இந்தியாவில் 80%க்கும் அதிகமான வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG – Fast Moving Customer Goods) விற்பனைகள் பாரம்பரிய வணிகர்களால் நடைபெறுகின்றன. ஆனால் இன்று அவர்களே அதிக போட்டி மற்றும் செலவுகளுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG – Fast Moving Customer Goods) ப்ராண்டுகள் குறைந்தது 3%–5% கூடுதல் மார்ஜினை வழங்க வேண்டும்.
“வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) ப்ராண்டுகள் பாரம்பரிய வணிகர்களின் பங்களிப்பை மதித்து, அவர்களுக்கு வளர்ச்சி வழிகளை வழங்க வேண்டியது அவசியம். இல்லையெனில், இந்தியாவின் வணிக அடித்தளமே பாதிக்கப்படும்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர்களின் நலனையும் எதிர்கால வளர்ச்சியையும் கருதி, அவர்களின் மனநிலையும் எதிர்பார்ப்புகளும் இந்த செய்தியில் வெளிப்படுத்துகிறேன். நாளைய வணிக உலகம் வலுவாக உருவாக, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) ப்ராண்டுகள் பாரம்பரிய வணிகர்களுக்கு கூடுதல் ஆதரவும், நேர்த்தியான லாபவிகிதமும் வழங்க வேண்டும் என்பது இன்றைய கால அவசியமும், எனது கோரிக்கையாகவும், இந்த இடத்தில் அனைத்து வணிகர்களின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
வணிகர் தின நல்வாழ்த்துகள்!
தமிழ் வணிகர்கள் எப்போதும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பும் தைரியமும் நம் சமூகத்திற்கு முக்கியமான பங்களிப்பாக உள்ளது. ரீட்டைல் ஜி (RetailG) நிறுவனத்தின் சார்பாக, அனைத்து வணிகர்களுக்கும் இதயப்பூர்வமான வணிகர் தின நல்வாழ்த்துகள்! உங்கள் வணிக பயணம் வலிமையாகவும், வளர்ச்சியுடனும் தொடர, ரீட்டைல் ஜி (RetailG) எப்போதும் உங்கள் பக்கமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.