இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த இளைஞர்களை கவர புதிய புதிய மோட்டார் சைக்கிள்கள் தினந்தோறும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.
தற்போதைய காலகட்டத்தில் மின்சார வாகனங்கள் வேகத்தில் மின்னல் வேகத்தில் மார்க்கெட்-ஐ பிடித்துவருகின்றன. இதற்கிடையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மாஸ்டர் பீஸ் தயாரிப்பை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
-
ராயல் என்ஃபீல்டு மீடியோர் 650
இந்தப் புல்லட் இந்தியாவின் தலைசிறந்த அதிவேக இரு சக்கர வாகனமாக இருக்கும். குறிப்பாக லாங் டிரைவ் செல்லும் நபர்களுக்கு இந்த வாகனம் பேருதவியாக இருக்கும்.
அந்த வகையில் நீங்கள் சென்னையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து டெல்லிக்கும் ஆயிரம் கிலோ மீட்டர் கூட எளிதில் பயணிக்க முடியும்.
மேலும், ராயல் என்ஃபீல்டு தயாரிப்பின் புதிய மாடலான மீடியோர் 650 (Meteor 650) வேகம் 350 கிலோ மீட்டர் ஆகும். இந்தப் புல்லட்டுகள் 7 வண்ணங்களில் தயாராகி உள்ளன. மேலும், இது புளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படலாம்.
இந்தப் பைக்கானது லிட்டருக்கு 30 கிமீ கொடுக்கிறது. மேலும் இது மூன்று வகைகளில் கிடைக்கிறது: ஆஸ்ட்ரல் (ரூ 3,48,900), இன்டர்ஸ்டெல்லர் (ரூ 3,63,900) மற்றும் செலஸ்டியல் (ரூ 3,78,900) ஆகும்.
-
ராயல் என்ஃபீல்டு மீடியோர் 650
ராயல் என்ஃபீல்டு மீடியோர் 650 விவரக்குறிப்புகள்எஞ்சின்: 648 சிசி பெட்ரோல்
- சக்தி: 47 PS (46.36 bhp)
- கியர்பாக்ஸ்: 6-வேகம், கையேடு
- எரிபொருள் கிடங்கு: 15.7 லிட்டர்
- வீல்பேஸ்: 1,500 மிமீ
- இருக்கை உயரம்: 740 மிமீ
- கிரவுண்ட் கிளியரன்ஸ்: 135 மிமீ
- எடை : 241 கிலோ
- விலை: ரூ 3.49 லட்சம் முதல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/