இந்திய அரசின் மானிய உதவியை நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பலன்களை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என ஸ்டேட் பேங் ஆப் இந்தியா தெரிவித்தது.
We would like to inform our customers that Aadhaar Card seeding is mandatory for those desirous of receiving any benefit or subsidy from Govt. of India through Direct Benefit Transfer.#DirectBenefitTransfer #AadhaarCard pic.twitter.com/EICJUbBeVC
— State Bank of India (@TheOfficialSBI) February 17, 2021
வங்கி கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது என்பதை இங்கே காண்போம்.
இணையதளம் மூலமாக: இணையதளம் மூலமாகவே எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
ஆன்லைன் பேங்கிங் வசதி கொண்ட வாடிக்கையாளர்கள் www.online.com என்ற இணைய தளத்தில் லாக் இன் செய்து, 'மை அக்கவுண்ட்' என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், 'லிங்க் யுவர் ஆதார் நம்பர்' என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு, உங்கள் 16 இலக்கு ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலம் ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்ப ஓடிபி பொத்தானை கிளிக் செய்யவேண்டும். பின்னர், பெற்ற கடவுச்சொல்லை குறிப்பிட்டு ஓ.கே கொடுக்க வேண்டும். இந்த எளிய நடைமுறை மூலம் உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடலாம்.
எஸ்பிஐ ஏடிஎம்:
உங்கள் அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் வாயிலாகவும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடலாம்.
உங்கள் ஏடிஎம் கம் டெபிட் கார்டை ஏடிஎம் மெசினில் ஸ்வைப் செய்ய வேண்டும். 'Service – Registrations' என்பதை தேர்வு செய்ய வேண்டும். மெனுவில், Aadhaar Registration என்பதை தேர்ந்தெடுக்கவும்
இப்போது கணக்கு வகையை (சேமிப்பு) தேர்ந்தெடுக்க வேண்டும். 16 இலக்கு ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இரண்டாவது முறையாக மீண்டும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் இணைப்பு நிலை தொடர்பான தகவல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
வாடிக்கையாளர்கள், நேரடியாக தங்கள் வங்கி அலுவலகத்துக்கு சென்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.