புதுசா அக்கவுண்ட் ஓபன் பண்ண போறீங்களா? பெஸ்ட் சேவைகளை தெரிந்து கொண்டால் நல்லது!

வீடு தேடி வரும் வங்­கிச்­சே­வை­யாக இது அமையும்.

sbi bank account sbi bank account schemes sbi
sbi bank account sbi bank account schemes sbi

sbi account opening state bank account opening sbi bank : புதுசா பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறீங்களா? உங்களுக்கான பெஸ்ட் சேவைகளை பாருங்கள்.

இந்­தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, நாடு முழுவதும் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி சேமிப்பு கணக்கு சேவை, பரி­வர்த்­தனை வச­தி­களை வழங்­கு­வ­தோடு, வீடு தேடி வரும் வங்­கி­ சே­வை­யை­யும் அளிக்­கிறது.

இந்­தியா பேமென்ட் போஸ்ட் வங்கி மூன்று வகை­யான சேமிப்பு கணக்குகள் உள்ளன. வழக்­க­மான சேமிப்பு கணக்கு மூலம், எந்­த­வித கட்­ட­ண­மும் செலுத்­தா­மல், பணத்தை எடுக்­க­லாம். இதற்­கான அணு­கல் மையங்­கள் அல்­லது வீடு தேடிய சேவைக்கு விண்­ணப்­பித்து, இந்த வகை கணக்கை துவக்­க­லாம். ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு என்­ப­தால் குறைந்த பட்ச தொகையை பரா­ம­ரிக்க வேண்­டாம். காலாண்டு சேமிப்பு கணக்கு அறிக்கை இல­வ­ச­மாக அளிக்­கப்­படும்.

இரண்­டா­வ­தாக வழங்­கப்­படும், டிஜிட்­டல் சேமிப்பு கணக்கை, இந்­தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயலி மூலம் துவக்­க­லாம். பான் கார்டு மற்­றும் ஆதார் எண் விப­ரங்­களை அளித்து, எளி­தாக இந்த சேமிப்பை கணக்கை துவக்­க­லாம். எனி­னும், ஒராண்­டுக்­குள், கே.ஒய்.சி.,நடை­மு­றையை பூர்த்தி செய்ய வேண்­டும். அதன் பின், இது வக்­க­மான கணக்­காக மேம்­ப­டுத்­தப்­படும். இவைத்­த­விர, ‘பேஸிக் அக்­க­வுன்ட்’ எனப்­படும் அடிப்­படை சேமிப்பு கணக்கு சேவை­யும் வழங்­கப்­ப­டு­கிறது. வழக்­க­மான சேமிப்பு கணக்கு அம்­சங்­கள் கொண்­டி­ருந்­தா­லும், மாதம் நான்கு முறை மட்­டுமே, பணம் எடுக்க முடி­யும்.

இந்­திய அஞ்­ச­ல­கத்­துறை வழங்­கும் சேமிப்பு கணக்­கு­டன், பேமென்ட் வங்கி கணக்கு சேவையை இணைத்­துக்­கொள்­ளும் வச­தி­யும் அளிக்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு இணைக்­கப்­பட்­டால், பேமென்ட் கணக்­கில் ஒரு லட்­சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்­தால், எஞ்­சிய தொகை அஞ்­ச­லக சேமிப்பு கணக்­கிற்கு மாற்­றப்­படும். நான்கு வகை­யான சேமிப்பு கணக்­கு­க­ளுமே, 4 சத­வீத வட்டி அளிக்­கின்­றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi account opening state bank account opening sbi bank account opening state bank of india

Next Story
வங்கியில் இந்த 7 அக்கவுண்டில் பணத்தை போடுங்க.. வட்டியை அள்ளலாம்!icici netbanking icici bank netbanking icici net banking icici
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com