scorecardresearch

மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வட்டி.. எஸ்.பி.ஐ.,யில் புதிய திட்டம் அறிமுகம்

எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டம் 2023ன் வட்டி விகிதம், காலம், கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

SBI Vs Union Bank Of India FD Rates
ரெப்போ விகித உயர்வால் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகித உயர்வு அதிகரிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு புதிய வரையறுக்கப்பட்ட கால நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு 7.6% மற்றும் பிறருக்கு 7.1% வட்டி விகிதத்தை வழங்கும்.
எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பொருந்தக்கூடிய கூடுதல் 1% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

திட்டத்தின் கடைசி தேதி

அம்ரித் கலாஷ் நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் டெபாசிட் காலம் 400 நாட்கள் ஆகும். இந்தத் திட்டம் பிப்ரவரி 15, 2023 முதல் மார்ச் 31, 2023 வரை கிடைக்கும்.

எனவே, இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31 மார்ச் 2023 ஆகும். இத்திட்டத்தின் காலம் 400 நாட்களாக இருப்பதால், மூத்த குடிமக்களுக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகைக்கு சுமார் ரூ.8600 வட்டியை இந்தத் திட்டம் வழங்கும்.

மற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் 400 நாட்களில் ரூ.8017 வட்டி கிடைக்கும். எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வட்டி விகிதம், தபால் அலுவலகம் வழங்கும் 1 வருட கால வைப்புத்தொகையை விட சிறந்தது.

விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் SBI கிளை, SBI இன்டர்நெட் பேங்கிங் அல்லது SBI YONO ஆப் மூலம் அம்ரித் கலாஷ் டெபாசிட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi amrit kalash senior citizens get a new fixed deposit option interest rate 7 6