ஒரு தொழில் செய்ய முதலீடு பெரிதாக தேவைப்படுவதால் பலரும் வணிகத்தில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் ஏ.டி.எம். இயந்திரம் நிறுவுவதன் மூலமாக மாதம் ரூ.50 முதல் ரூ.90 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம்.
உரிமம் பெறுவது எப்படி?
ஏடிஎம் உரிமையைப் பெற, அதற்கான ஒப்பந்தத்தை வைத்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணமாக நீங்கள் எஸ்பிஐயின் ஏடிஎம் உரிமையைப் பெற விரும்பினால், நீங்கள் இந்தியா ஒன் ஏடிஎம் அல்லது டாடா இண்டிகேஷ் அல்லது முத்தூட் ஏடிஎம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஏனெனில் இவை எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. போன்ற பெரும்பாலான வங்கிகளுக்கான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன.
ஏடிஎம் கேபின் அமைப்பதற்கான நிபந்தனைகள்
விண்ணப்பதாரரிடம் 50 முதல் 80 அடி பரப்பளவு கொண்ட கட்டடம் இருக்க வேண்டும்
மற்ற ஏடிஎம்களில் இருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 1 கிலோவாட் மின்சார இணைப்பு எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும்
கேபின் கான்கிரீட் கூரையுடன் கூடிய நிரந்தர கட்டிடமாக இருக்க வேண்டும்.
ஏடிஎம் கேபின் பார்க்கக்கூடிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் முகவரி, போன் நம்பர், ஜி.எஸ்.டி எண் மற்றும் தொழில் ஆவணங்கள்.
டெபாசிட் எவ்வளவு?
ஏடிஎம் கேபின் அமைப்பதற்கு அனுமதி பெற விண்ணப்பதாரர்கள் ரூ.2 லட்சம் பாதுகாப்புத் தொகை மற்றும் ரூ.3 லட்சம் செயல்பாட்டு மூலதனம் டெபாசிட் செய்ய வேண்டும்.
மொத்த முதலீடு சுமார் 5 லட்சம் ரூபாய். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும், நீங்கள் ரூ. 8 பெறுவீர்கள், மேலும் ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு ரூ. 2 கிடைக்கும்.
ஏடிஎம் பயன்படுத்தப்பட்டு செயல்பட்ட பிறகுதான் இந்த வருமானம் தொடங்கும். முக்கியமாக இதில் தனிநபருக்கோ, முகவருக்கோ பணம் செலுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வ தளத்தில்விண்ணப்பிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“