SBI Minimum Balance Rules: எஸ்.பி.ஐ வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், இந்த கட்டுரை உங்களுக்குத் தான். ஆம்! உங்களது எஸ்.பி.ஐ கணக்கில் குறைந்த பட்ச சேமிப்புத் தொகையாக எவ்வளவு ரூபாயை வைத்திருக்க வேண்டுமென வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி தெரியப்படுத்தியுள்ளது.
மெட்ரோ நகரம் மற்றும் நகர் புறங்களில் வசிக்கும் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களது ‘சேவிங்ஸ் பேங்க்’ அக்கவுண்டில் 3000 ரூபாயை சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும். மேலும் சிறு நகரங்களில் குடியிருப்போர் 2000 ரூபாயும், கிராமங்களில் வசிப்போர் 1000 ரூபாயும் சேமிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டுமென இதன் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.