உங்கள் பணத்திற்கு எக்ஸ்ட்ரா பாதுகாப்பு: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டை மறக்காதீங்க!

SBI savings account; how to update email ID tamil news: எஸ்பிஐ வங்கியில் உள்ள உங்கள் சேமிப்புக் கணக்கின் மின்னஞ்சல் ஐடியை ஆன்லைன், மொபைல் செயலி மற்றும் எஸ்பிஐயின் கிளை போன்றவற்றின் மூலமாக எவ்வாறு புதுப்பிப்பது என்பது பற்றி இங்கே காணலாம். 

SBI bank tamil news how to update email ID in online for SBI savings account
SBI bank tamil news how to update email ID in online for SBI savings account

SBI bank tamil news: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு, தங்கள் சேமிப்புக் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதனை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மொபைல் செயலி மூலமாகவோ அல்லது எஸ்பிஐ கிளையைப் பார்வையிடுவதன் மூலமாகவோ எளிமையாக மாற்றிக் கொள்ளலாம். 

உங்கள் சேமிப்புக் கணக்கின் மின்னஞ்சல் ஐடியை ஆன்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது 

முதலில் எஸ்பிஐ வங்கியின் இணைய பக்கமான Www.onlinesbi.com இல் உள்நுழைய வேண்டும். அதில்சுயவிவரம்தனிப்பட்ட விவரங்கள்மின்னஞ்சல் ஐடியை மாற்றுஎன்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அவை இப்போது திரையின் இடது பேனலில் தோன்றும்எனது கணக்குகள்என்பதன் கீழ் இருக்கும். பின்னர் அடுத்த பக்கத்தில், கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டுசமர்ப்பிஎன்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

இப்போது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச் சொல்லையைப்  (OTP) பயன்படுத்தி மின்னஞ்சல் முகவரிக்கான மாற்றங்கள் செய்து சுய ஒப்புதல் பெறலாம்.அல்லது  நீங்கள் கிளை ஒப்புதல் விருப்பத்தை தேர்ந்தெடுத்து கிளையில் சமர்ப்பிக்கலாம்.

எஸ்பிஐ வங்கியின் கிளைக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு புதுப்பிப்பது 

இதற்கு உங்கள் அருகமையிலுள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையைக்கு செல்ல வேண்டும். அங்கு மின்னஞ்சல் ஐடியை மாற்றுவதற்கான கோரிக்கைக் கடிதத்தை கேட்டு பெற்று, அதை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும். அதன் பின் அந்த கடிதத்தை அங்குள்ள பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும். உங்களுடைய கடிதம்  சரிபார்ப்பிற்குப் பிறகு, நீங்கள் அணுகிய கிளையால் உங்களுடைய மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு செய்யப்படும். உங்களது மின்னஞ்சல் ஐடி புதுப்பிக்கப்பட்டதற்கான மின்னஞ்சலை, உங்களுடைய மின்னஞ்சல் ஐடியில் பெறுவீர்கள்.

எஸ்பிஐ வங்கியின் மொபைல் செயலி மூலம் உங்கள் மின்னஞ்சல் ஐடியை எவ்வாறு புதுப்பிப்பது 

முதலில், நீங்கள் எஸ்பிஐ வங்கியின்யோனாமொபைல் செயலியின் உள்நுழைய வேண்டும். பிறகு மெனுவில் இருந்து, ‘எனது சுயவிவரம்என்பதற்குச் சென்றுதிருத்துஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும். இப்போது ஒரு கடவுச் சொல்லையை உருவாக்கி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒரு முறை பயனப்டுத்தப்படும் கடவுச் சொல்லை (OTP) உள்ளிடவும். அதன் பிறகு ​​’சமர்ப்பிஎன்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய மின்னஞ்சல் ஐடி புதுப்பிக்கப் பட்டு இருக்கும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi bank tamil news how to update email id in online for sbi savings account

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com