Advertisment

எஸ்.பி.ஐ லைஃப் வருவாய் ரூ.304 கோடி இழப்பு.. மூன்றாம் காலாண்டு அறிக்கை இதோ!

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் வருவாய் 2022-23ஆம் ஆண்டின் 3ஆவது காலாண்டில் 16.5 சதவீதம் (ரூ.304 கோடி) சரிந்துள்ளது.

author-image
Jayakrishnan R
New Update
SBI Life Q3 profit falls Rs 304 crore

எஸ்.பி.ஐ லைஃப் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 16.46% சரிந்து ரூ.304.13 கோடியாக உள்ளது.

தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், நிகர பிரீமியம் வருவாயில் மந்தமான வளர்ச்சியைக் கண்டதால், அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 16.46% சரிந்து ரூ.304.13 கோடியாக உள்ளது.

அந்த வகையில், கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் காப்பீட்டு நிறுவனம் ரூ.364.06 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதன் நிகர பிரீமியம் வருமானம், கடந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலக்கட்டத்தில் 6.35% உயர்ந்து ரூ.19,170.80 கோடியாக இருந்தது,

Advertisment

முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.18,025.35 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் முதல் ஆண்டு பிரீமியம் 24.09% உயர்ந்து ரூ. 5,055.17 கோடியாக இருந்தது,

இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ. 4,073.55 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் புதுப்பித்தல் பிரீமியம் ஆண்டுக்கு ஆண்டு 13% அதிகரித்து ரூ.10,908.30 ஆக இருந்தது.

கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 79.21% ஆக இருந்த நிலையில், 13வது மாதத்திற்கான நிலைத்தன்மை விகிதம் 80.53% ஆக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment