/indian-express-tamil/media/media_files/2025/10/23/sbi-mutual-fund-sip-plans-top-5-sbi-sip-schemes-2025-10-23-11-03-50.jpg)
SBI Mutual Fund SIP Plans| Top 5 SBI SIP Schemes| Best SIP Returns 10 Years
இன்றைய பொருளாதாரச் சூழலில், சாதாரண சம்பளத்தில் இருந்து ஒரு பெரிய தொகையைச் சேமித்து, எதிர்காலக் கனவுகளை நனவாக்குவது சவாலான விஷயம். ஆனால், ஒரு ஸ்மார்ட்டான முதலீட்டு முறை, உங்கள் சிறிய மாதாந்திர சேமிப்பை ஒரு பெரிய செல்வமாக (Wealth) மாற்றும் திறன் கொண்டது! அந்த மந்திரக் கருவிதான் எஸ்.ஐ.பி (SIP - Systematic Investment Plan).
இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (SBI Mutual Fund), பலருக்கும் இந்த மந்திரத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், அதன் டாப் 5 எஸ்.ஐ.பி திட்டங்கள் ஆண்டுக்கு 20.5% வரை அபாரமான வருமானம் கொடுத்து, முதலீட்டாளர்களைக் குதூகலிக்கச் செய்துள்ளன!
மாதாமாதம் ₹10,000: 10 ஆண்டுகளில் ₹35 லட்சம் சாத்தியம்!
ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக மாதம் தவறாமல் ₹10,000 மட்டும் எஸ்பிஐ-ன் சிறந்த எஸ்.ஐ.பி திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அவரது முதலீட்டின் மொத்த மதிப்பு ₹12 லட்சம் மட்டுமே. ஆனால், இன்று அதன் மதிப்பு ₹35.5 லட்சம் வரை உயர்ந்திருக்கும்! அதாவது, ₹23.5 லட்சம் லாபம்! இந்த அசுர வளர்ச்சியை அளித்த எஸ்பிஐ-ன் டாப் 5 திட்டங்களின் பட்டியலை இங்கே காணலாம்:
திட்டங்களின் சிறப்பம்சங்களும் அதன் வருமானமும்
1. எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்ச்சுனிட்டிஸ் ஃபண்ட் (SBI Technology Opportunities Fund: 20.59% CAGR)
முதலீட்டு இலக்கு: வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்துகிறது.
எஸ்.ஐ.பி (SIP) வருமானம்: 10 ஆண்டுகளில் 20.59% கூட்டு வருடாந்திர வளர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, மாதம் ₹10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ₹35.5 லட்சமாக மாறியிருக்கும். ₹1 லட்சம் முதலீடு இன்று ₹5.1 லட்சமாக மாறியிருக்கும்.
முதலீட்டுக் குறிப்பு: தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்ட நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வலுவான தேர்வாக உள்ளது.
2. எஸ்.பி.ஐ. காண்ட்ரா ஃபண்ட் (SBI Contra Fund: 20.48% CAGR)
முதலீட்டு இலக்கு: தற்போது சந்தையில் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள, ஆனால் எதிர்காலத்தில் வலுவான வளர்ச்சித் திறன் கொண்ட பங்குகளில் முதலீடு செய்யும் முரண்பாடான (Contrarian) அணுகுமுறையைக் கையாளுகிறது.
SIP வருமானம்: 10 ஆண்டுகளில் 20.48% கூட்டு வருடாந்திர (CAGR) வருமானத்தைக் கொடுத்து, ₹10,000 மாத எஸ்.ஐ.பி-ஐ ₹35 லட்சமாக அதிகரித்துள்ளது.
முதலீட்டுக் குறிப்பு: ஒரே முறை (Lump Sum) முதலீடு செய்தவர்களுக்கும் 16.91% கூட்டு வருடாந்திர வருமானம் அளித்து, ₹1 லட்சம் முதலீட்டை ₹4.8 லட்சமாக மாற்றியுள்ளது.
3. எஸ்.பி.ஐ. ஸ்மால் கேப் ஃபன்ஃப் (SBI Small Cap Fund: 19.93% CAGR)
முதலீட்டு இலக்கு: சிறிய, ஆனால் வேகமாக வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
எஸ்.ஐ.பி. வருமானம்: 10 ஆண்டுகளில் 19.93% கூட்டு வருடாந்திர வருமானம் (CAGR) அளித்து, ₹10,000 மாத எஸ்.ஐ.பி-ஐ ₹35 லட்சமாக மாற்றியுள்ளது. ஒரே முறை முதலீட்டில் 19.38% (CAGR) வருமானம் அளித்து, ₹1 லட்சம் முதலீட்டை இன்று ₹5.88 லட்சமாக மாற்றியுள்ளது.
முதலீட்டுக் குறிப்பு: ஸ்மால் கேப் நிறுவனங்களில் அதிக ரிஸ்க் (Risk) இருந்தாலும், நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்கு இது வலுவான வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.
4. எஸ்.பி.ஐ. பிஎஸ்யு ஃபண்ட் (SBI PSU Fund: 19.63% CAGR)
முதலீட்டு இலக்கு: பொதுத்துறை நிறுவனங்களில் (Public Sector Undertakings) முதலீடு செய்யும் திட்டம்.
எஸ்.ஐ.பி. வருமானம்: 10 ஆண்டுகளில் 19.63% கூட்டு வருடாந்திர வருமானம் (CAGR) அளித்துள்ளது. ₹10,000 மாத எஸ்.ஐ.பி-க்கு ₹34 லட்சம் தொகுப்பு நிதி கிடைத்துள்ளது.
5. எஸ்.பி.ஐ. ஹெல்த்கேர் ஆபர்ச்சுனிட்டீஸ் ஃபண்ட் (SBI Healthcare Opportunities Fund: 19.14% CAGR)
முதலீட்டு இலக்கு: சுகாதார மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் (Healthcare and Pharmaceutical sectors) முதலீடு செய்கிறது.
எஸ்.ஐ.பி. வருமானம்: 10 ஆண்டுகளில் 19.14% கூட்டு வருடாந்திர வருமானம் (CAGR) அளித்துள்ளது. ₹10,000 மாத எஸ்.ஐ.பி-க்கு ₹32.64 லட்சம் தொகுப்பு நிதி கிடைத்துள்ளது. ஒரே முறை முதலீடு 12.25% (CAGR) வருமானம் அடைந்து, ₹1 லட்சம் முதலீடு இன்று ₹3.18 லட்சமாக மாறியுள்ளது.
ஏன் எஸ்.ஐ.பி ஒரு சிறந்த முதலீட்டு முறை?
எஸ்.ஐ.பி-ன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது முதலீட்டாளர்களைச் சந்தையின் நேரத்தைப் பற்றி கவலைப்படுவதிலிருந்து விடுவிக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வதால், "ரூபாய் செலவு சராசரி" (Rupee-Cost Averaging) என்ற பலன் கிடைக்கிறது. இது சந்தை ஏற்ற இறக்கங்களின் போது முதலீட்டுச் செலவுகளைச் சமன் செய்ய உதவுகிறது. நீண்ட காலத்தில், இந்த அணுகுமுறை ஒழுக்கத்தையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதால், விரைவான செல்வ உருவாக்கத்திற்கு உதவுகிறது.
முதலீட்டாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தையின் அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருமானங்கள் எப்போதும் எதிர்காலச் செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் முடிவுகளை வெறும் கடந்த கால வருமானத்தை மட்டும் வைத்து எடுக்காமல், தங்கள் நிதி இலக்குகள், இடர் தாங்கும் திறன் மற்றும் முதலீட்டு கால அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நிதி ஆலோசகர்களைக் கலந்தாலோசித்த பின்னரே முதலீடு செய்ய வேண்டும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us