நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ரூ.16,695 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 83% நிகர லாபம் உயர்வாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.9,113 கோடியாக இருந்தது. தொடர்ந்து மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஒரு பங்குக்கு (1130%) ரூ.11.30 ஈவுத்தொகையை வாரியம் அறிவித்தது.
அந்த வகையில், நான்காவது காலாண்டில் நிகர வட்டி வருமானம் 29% அதிகரித்து ரூ.40,393 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.31,198 கோடியாக இருந்தது.
மேலும், மார்ச் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு 25% அதிகரித்து ரூ.24,621 கோடியாக உள்ளது. காலாண்டில் உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (NIM) 44 அடிப்படை புள்ளிகள் YYY 3.84% ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, முழு நிதியாண்டில், எஸ்பிஐயின் நிகர லாபம் ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது. FY23 இல் லாபம் 50,232 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு 58% வளர்ச்சியைக் காட்டுகிறது.
முழு ஆண்டிற்கான NII ஆண்டுக்கு 20% உயர்ந்துள்ளது. FY23 க்கான இயக்க லாபம் ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்து ரூ.83,713 கோடியாக இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை எஸ்பிஐ பங்குகள் 1.07% குறைந்து, தேசிய பங்குச் சந்தையில் (NSE) ரூ.580 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“