scorecardresearch

83% அதிகரித்த எஸ்.பி.ஐ நிகர லாபம்: ஒரு பங்குக்கு ரூ.11.30 ஈவுத் தொகை அறிவிப்பு

எஸ்.பி.ஐ வங்கியின் நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

SBI Net profit zooms
நான்காம் காலாண்டில் எஸ்.பி.ஐ லாபம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ரூ.16,695 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 83% நிகர லாபம் உயர்வாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.9,113 கோடியாக இருந்தது. தொடர்ந்து மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் ஒரு பங்குக்கு (1130%) ரூ.11.30 ஈவுத்தொகையை வாரியம் அறிவித்தது.

அந்த வகையில், நான்காவது காலாண்டில் நிகர வட்டி வருமானம் 29% அதிகரித்து ரூ.40,393 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.31,198 கோடியாக இருந்தது.
மேலும், மார்ச் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு 25% அதிகரித்து ரூ.24,621 கோடியாக உள்ளது. காலாண்டில் உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (NIM) 44 அடிப்படை புள்ளிகள் YYY 3.84% ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, முழு நிதியாண்டில், எஸ்பிஐயின் நிகர லாபம் ரூ.50,000 கோடியைத் தாண்டியுள்ளது. FY23 இல் லாபம் 50,232 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு 58% வளர்ச்சியைக் காட்டுகிறது.
முழு ஆண்டிற்கான NII ஆண்டுக்கு 20% உயர்ந்துள்ளது. FY23 க்கான இயக்க லாபம் ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்து ரூ.83,713 கோடியாக இருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை எஸ்பிஐ பங்குகள் 1.07% குறைந்து, தேசிய பங்குச் சந்தையில் (NSE) ரூ.580 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi q4 results out