ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெபாசிட்களுக்கான வட்டி வீதத்தை குறைத்துள்ளது.
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
சேமிப்பு வங்கி டெபாசிட்டுகளுக்கான இந்த புதிய வட்டி விகிதம் அக்டோபர் 15 முதல் 2.7 சதவீதம் அமலுக்கு வருகிறது. புதிய சேமிப்பு விகிதங்கள் ரூ.10 கோடிக்கும் குறைவான இருப்புகளுக்கு பொருந்தும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வைப்புத்தொகைகளுக்கு வங்கி முன்பு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டியை வழங்கியது.
இருப்பினும், வங்கி, ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கு இருப்புகளுக்கான வைப்பு விகிதங்களை 2.75 சதவீதத்தில் இருந்து ஆண்டுக்கு 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மேலும், நிலையான வைப்புத்தொகைக்கான அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கி உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் 3% முதல் 5.85% வரை வட்டி விகிதங்களைப் பெறலாம். தவிர, மூத்த குடிமக்களுக்கு சாதாரண வட்டி விகிதத்தை விட கூடுதல் வட்டி கிடைக்கும்.
வங்கி இப்போது 5.8% வட்டி விகிதத்தை மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்களுக்கும் குறைவாக உள்ள வைப்புகளுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 6.3% வட்டியைப் பெறுவார்கள்.
தொடர்ந்து, ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட முதிர்வு கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொது மக்களுக்கான 5.65 சதவீதத்திலிருந்து 5.85 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு 6.45 சதவீதத்திலிருந்து 6.65 சதவீதமாகவும் வங்கி உயர்த்தியது.
பாரத ஸ்டேட் வங்கி 40 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் டெபாசிட் வட்டி வீதத்தை குறைக்கும் போது இதில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“