SBI Amrit Kalash fixed deposit scheme : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அம்ரித் கலாஷ் நிரந்தர வைப்புத் திட்டத்தை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தத் திட்டம் பொது மக்களுக்கு 7.1 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதத்தையும் வழங்குகிறது.
இது தொடர்பாக வங்கி இணையதளத்தில், “400 நாள்கள்’ (அம்ரித் கலாஷ்) என்ற குறிப்பிட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் ஏப்.12ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள் 7.60% வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்தத் திட்டம் 30-ஜூன்-2023 வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் நிலையான வைப்புத் திட்டம் ரூ.2 கோடிக்கும் குறைவான உள்நாட்டு சில்லறை கால வைப்புகளில் செல்லுபடியாகும்.
தொடர்ந்து, வருமான வரிச் சட்டத்தின்படி திட்டத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும். எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் கடன் வசதி உள்ளது. முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“