Advertisment

ஸ்டேட் பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? இதுக்கு மட்டும் கட்டணம் கிடையவே கிடையாது!

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும்.

author-image
WebDesk
New Update
sbi sbi home loan sbi sbi homeloan offer sbi

sbi sbi home loan sbi sbi homeloan offer sbi

sbi state sbi state bank of india sbi : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த சேவைக்கு எந்த கட்டணமும் கிடையாது.

Advertisment

புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு உதவும்,

அதே சமயம், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி அறியவும் இது உதவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை ஏனெனில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது.

அப்படி நடந்திருப்பதை சரியான நேரத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கும் வாய்ப்பில்லை. எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள ஏடிஎம் திருத்தங்களில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும்.

எவராலும் 10,000க்கு மேல் வங்கி ஏடிஎம் களில் பணம் எடுக்க முடியாது. இதன் மூலமாக நீங்கள் உங்கள் கார்ட்டை ப்ளாக் செய்வதற்கான அவகாசம் கிடைக்கிறது என்கிறார்கள். அதே போல், மொபைல் எண்ணை மறக்காமல் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்து விடுங்கள். வேறு ஏதாவது காரணத்தினால் உங்களது பழைய நம்பரை மாற்ற நேரிட்டால் வங்கிக்கு அதை உடனே அதை தெரியப்படுத்தவும். மொபைல் எண் மட்டும் அல்ல, மெயில் ஐடியும் அப்படித்தான். ஏனெனில் உங்களது மெயில் ஐடியை வைத்தும் மோசடி செய்ய முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment