Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: இந்த வங்கியை நோட் பண்ணுங்க ப்ளீஷ்!

Senior Citizen Fixed Deposit Interest Rate Hike 2023: மூத்த குடிமக்கள் இப்போது சூர்யோடே சிறு நிதி வங்கியில் (SSFB) 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 9.10% வரை வட்டி விகிதத்தைப் பெறலாம்.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

புதிய வட்டி விகிதத்தை ஆக்ஸிஸ் வங்கி ஆக.14ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

Senior Citizen Fixed Deposit Interest Rate Hike 2023: மூத்த குடிமக்கள் தற்போது சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் (SSFB) 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 9.10% வரை வட்டி விகிதத்தைப் பெறலாம்.

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 07, 2023 முதல் அமலுக்கு வருகின்றன. தொடர்ந்து, 5 ஆண்டு காலத்திற்கான அதன் நிலையான வைப்பு விகிதங்களை 85 அடிப்படை புள்ளிகள் வரை (0.85%) அதிகரித்துள்ளன.

Advertisment

மேலும் இந்தத் திருத்தத்தை தொடர்ந்து, பொது மக்களுக்கு 4.00% முதல் 8.60% வட்டி விகிதத்திலும், மூத்த குடிமக்களுக்கு 4.50% முதல் 9.10% வரையிலும் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு கிடைக்கிறது.

தொடர்ந்து, வழக்கமான வாடிக்கையாளர்கள் இப்போது மேலே உள்ள 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 8.60% வட்டி விகிதத்தைப் பெறலாம், மூத்த குடிமக்கள் 9.10% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

ஆகஸ்ட் 7, 2023 முதல் SSFB நிலையான வைப்பு வட்டி விகிதங்கள்

  • 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 4% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4.5% வழங்குகிறது.
  • 15 நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான எஃப்.டி.களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 4.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4.75% வழங்குகிறது.
  • 46 நாள்கள் முதல் 90 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 4.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5% வழங்குகிறது.
  • 91 நாள்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான எஃப்.டி,களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5.5% வழங்குகிறது.
  • 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 5.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6% வழங்குகிறது.
  • 9 மாதங்களுக்கு மேல் முதல் 1 வருடம் வரையிலான எஃப்.டி.க்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.5% வழங்குகிறது.
  • 1 ஆண்டு வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 6.85% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.35% வழங்குகிறது.
  • 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான எஃப்.டி.க்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வழங்குகிறது.
  • 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 8.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9% வழங்குகிறது
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 8.6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9.1% வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கு மேல் முதல் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 8.6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9.1% வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வங்கி பொது குடிமக்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வழங்குகிறது.

வங்கி அதன் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு ரூ. 7.00% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment